
அகஸ்தியா கிரியேஷன்ஸ் சார்பில் டெல்லி பஞ்சாப் ரோட் லைனர் நிறுவனர் வெங்கட் செல்லப்பா தயாரிக்கும் படம் ‘தருணம்’. கன்னடம் மற்றும் தமிழில் தயாராகிறது.
புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக பயணம் செய்கிறார்கள். அவர்கள் தங்கும் அறையில் ஒரு கருமையான உருவம் அவர்களை மிரட்டுகிறது.
தம்பதிகள் அங்கிருந்து தப்பித்து ஊருக்கு வருகின்றனர். ஆனால், தம்பதிகள் வருவதற்கு முன்பே அந்த உருவம் ஊருக்கு வந்து விடுகிறது. அதை பார்த்து மிரளும் தம்பதிகள் அங்கிருந்து தப்பித்து வேறு ஒரு இடத்திற்கு சென்று விடுகின்றனர்.
அங்கும் அந்த கருப்பு உருவம் வந்து நிறுகிறது. இந்த தம்பதிகள் எங்கு சென்றாலும் அந்த உருவம் துரத்திக் கொண்டே செல்கிறது. அந்த உருவத்திடம் இருந்து தம்பதிகள் தப்பித்தார்களா இல்லையா..? என்பதே படத்தின் மீதிக் கதை.
இதுவரை வெளியான பேய் படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ளது தருணம்.
மங்களூர், சிக்மகளூர், கோவை, ஊட்டி, உள்ளிட்ட இடங்களில் தருணம் உருவாகியுள்ளது. நாயகன் ராகு நஞ்சன், நாயகி மானஷா கவுடா
ஒளிப்பதிவு கிரண் பிட்டிங்
கதை திரைக்கதை வசனம் கே பி ரகு அடர்ந்த காட்டுப் பகுதியில் இதுவரை யாரும் காட்டிராத இடங்களில் பிரம்மாண்டமான முறையில் உருவாகியிருக்கிறது தருணம்.
ராக , ரமணா இசையமைத்துள்ளனர்.