Shadow

‘பளபள’ சந்தானம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

பி.வி.பி. சினிமா சார்பில் பியர்ல்.வி.போட்லுரி மற்றும் ஹேண்ட் மேட் ஃபிலிம்ஸ் (Hand made films) தயாரிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் ரசிகர்களின் மத்தியிலும், திரையுலக பிரமுகர்கள் குறிப்பாக சந்தானத்தின் பரந்த கதாநாயகர்கள் நண்பர்கள் வட்டத்துக்குள்ளும் இருந்து வரும் பாராட்டு அவரை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்த்திரையுலகில் ஏறத்தாழ எல்லா நடிகர்களுக்கும் நெருங்கிய நண்பனாக நடித்து, அவர்களுக்கு நண்பனாகவே மாறி விட்ட சந்தானத்துக்கு அவர்களின் பாராட்டு மிகவும் ஊக்கம் தந்து இருக்கிறதாம். கதாநாயகனாக நடிப்பதற்கென தீவிர எடைக் குறைப்பில் ஈடுபட்டு, இருபது வயது இளைஞன் போல் பொலிவுடன் இருக்கும் சந்தானம், இந்தப் படத்துக்காக பிரத்தியேக பயிற்சிகள் மூலம் நடனம் மற்றும் சண்டை பயிற்சியும் மேற்கொண்டு உள்ளார். இந்தப் படத்தில் சந்தானத்துக்கு இணையாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ கதாநாயகியாக நடிப்பவர் ஆஷ்னா சாவேரி.

‘அவரது ஈடுபாடு வியப்புக்குரியது. தான் கதாநாயகனாக நடிக்கும் படம் எந்த வகையிலும் ஜனரஞ்சகத்தில் ஒரு விகிதம் கூடக் குறையக் கூடாது என்ற எண்ணத்தில் எல்லாக் காட்சிகளிலும் ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார். நகைச்சுவையில் கோலோச்சும் சந்தானம் குணசித்திரம், நடனம், சண்டை, காதல் என்று எல்லாக் காட்சிகளிலும் வெளுத்துக் கட்டுகிறார். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ எல்லா தரப்பு ரசிகர்களைக் கவரும் வண்ணம் தயாரிக்கப்படும் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான படமாகும்’ என்று கூறுகிறார் நகைச்சுவை நடிகரும், இந்த படத்தின் இயக்குநருமான ஸ்ரீநாத்.

பணிக்குழு:

>> இயக்கம் – சாய்
>> இசை – சித்தார்த் விபின்
>> ஒளிப்பதிவு – ஷக்தி
>> படத்தொகுப்பு – சாய்
>> கலை – A.R.மோகன்
>> ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் – A.வெங்கடேசன்
>> பாடல் வரிகள் – மதன் கார்க்கி, நா.முத்துக்குமார்
>> நடனம் – ராஜேஷ் கண்ணா
>> சண்டை – திலீப் சுப்பராயன்