Shadow

மனதை உலுக்கும் காதல் கதை

அமர காவியம்

ஆர்யா, தன் ‘தி ஷோ பீப்பிள்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த ”அமர காவியம்” படத்தினைத் தனது பிரத்தியேக நண்பர்கள் சிலருடன் பார்த்துள்ளார்.

கண்கள் கலங்க படம் பார்த்து முடித்த ஆர்யா, அவர் நடிக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்கு அவசரமாகக் கிளம்பிச் சென்று விட்டார். உணர்ச்சிகளை அடக்கத் தெரியாத ஆர்யா, 143 கேக்குகளை ஆர்டர் செய்து தனது யூனிட்டுக்கும் நண்பர்களுக்கும் அளிஹ்துள்ளார். 143 என்பது காதலின் குறியீடாக இருப்பதால், அதே எண்ணிக்கையில் கேக்குகள் வாங்கினேன் என பெரிய புன்னகையுடன் சொன்னார் ஆர்யா.

“படத்தைப் பார்த்து நான் அசந்துட்டேன். படத்தின் இயக்குநர் ஜீவாசங்கர் என் நண்பர்; படத்தின் நாயகன் சத்யா என் தம்பி. இருவரும் உலகத்தரமான காத கதையை அளித்துள்ளனர். ஒரு நாயகனாக நான் நெகிழ்ந்துள்ளேன். ஆனா முதல் முறையாக ஒரு நல்ல திரைப்படத்தைத் தயாரித்ததற்காகப் பெருமைப்படுகிறேன். இந்தப் படத்தின் வரவேற்பினைப் பொறுத்து, தொடர்ந்து இது போன்ற நல்ல படங்களைத் தயாரிப்பேன்” என்றார் நடிகர் ஆர்யா.