Tag: அமர காவியம்
ஆர்யா நிகழ்த்திய அமரவிழா
ஆர்யா தன் தம்பி சத்யாவை வைத்துத் தயாரிக்கும் ‘அமர காவியம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை, அமரத்துவம் வாய்ந்த விழாவாக நிகழ்த்திக் காட்டினார். பொதுவாக இசை வெளியீட்டு விழாவில், இசை குறுந்தகடை ஆண்கள்தான் வெளியிடுவார்கள். ஆனால் நடிகையில் மத்தியில் செல்வாக்கு மிகுந்த நடிகரான, நாயகி ஒருவரை இசை குறுந்தகடை வெளியிட வைத்து இன்னொரு நாயகியைப் பெற்றுக் கொள்ளச் செய்தார். இயக்குநர் பாலா முன்னிலையில், குறுந்தகடை நயன்தாரா வெளியிட த்ரிஷா பெற்றுக் கொண்டார்.
விழாவிற்கு வந்தவர்கள் படத்தைப் பற்றிப் பேசியதோடு ஆர்யாவைத்தான் வஞ்சனை இல்லாமல் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர் நடிகைகளுக்கு மட்டுமா நண்பர்? நடிகர்களுக்கும்தான் உற்ற நண்பர்; இயக்குநர்களுக்கும் ஆத்ம நண்பர்; தயாரிப்பாளர்களுக்கும் நெருங்கிய நண்பரென!
“உங்க பாடல் வெளியீட்டு விழாவிற்கே வர மாட்டீங்களே.. ‘அமர காவியம்’ பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருக்கீங்க...
மனதை உலுக்கும் காதல் கதை
ஆர்யா, தன் ‘தி ஷோ பீப்பிள்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த ”அமர காவியம்” படத்தினைத் தனது பிரத்தியேக நண்பர்கள் சிலருடன் பார்த்துள்ளார்.
கண்கள் கலங்க படம் பார்த்து முடித்த ஆர்யா, அவர் நடிக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்கு அவசரமாகக் கிளம்பிச் சென்று விட்டார். உணர்ச்சிகளை அடக்கத் தெரியாத ஆர்யா, 143 கேக்குகளை ஆர்டர் செய்து தனது யூனிட்டுக்கும் நண்பர்களுக்கும் அளிஹ்துள்ளார். 143 என்பது காதலின் குறியீடாக இருப்பதால், அதே எண்ணிக்கையில் கேக்குகள் வாங்கினேன் என பெரிய புன்னகையுடன் சொன்னார் ஆர்யா.
“படத்தைப் பார்த்து நான் அசந்துட்டேன். படத்தின் இயக்குநர் ஜீவாசங்கர் என் நண்பர்; படத்தின் நாயகன் சத்யா என் தம்பி. இருவரும் உலகத்தரமான காத கதையை அளித்துள்ளனர். ஒரு நாயகனாக நான் நெகிழ்ந்துள்ளேன். ஆனா முதல் முறையாக ஒரு நல்ல திரைப்படத்தைத் தயாரித்ததற்காகப் பெருமைப்படுகிறேன். இந்தப் படத்தின் வரவேற்பினைப் பொறுத்...
ஆர்யா தயாரிக்கும் ‘அமர காவியம்’
வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து நடிப்பவர் என எல்லோராலும் பாராட்டப்படும் நடிகர் ஆர்யா, அந்தப் பெயரை ஒரு தயாரிப்பாளராகவும் ஈட்ட பெரும் முயற்சி மேற்கொண்டு உள்ளார். தனது பட நிறுவனமான 'தி ஷோ பீப்பிள்' என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும், 'அமர காவியம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. பெரும் வெற்றி பெற்ற 'நான்' திரைப்படம் மூலம் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த ஜீவா ஷங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கும் காதல் கதை இது . ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடிக்கும் 'அமர காவியம் ' படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் மியா ஜார்ஜ் .
'காதல் பற்றிய படங்கள், திரைப்படம் தோன்றிய காலத்தில் இருந்தே வந்த கொண்டேதான் இருக்கிறது. காதல் ஒரு நூல் இழை போல, அதை திறம்பட நெய்து பார்ப்பவரைக் கவரச் செய்வது ஒரு இயக்குனரின் கடமை. ஒவ்வொரு நெசவாளனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதைப் போலவே ஒவ்வொரு இயக்குநருக்கு...