Shadow

விஞ்ஞானி வித்யா

Saivam Vidhya

தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் நடிகர்களாக அறிமுகமாவது உண்டு. அந்த வகையில் நடிகைகள் அவ்வளவாக வருவது இல்லை. ஆனால் சமீபமாக பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் நடிகைகளாக அறிமுகம் ஆகிறார்கள். இயக்குநர் விஜய் இயக்கத்தில், Think Big ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘சைவம்’ படத்தின் மூலம் மிக முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாகும் வித்யா ஒரு விஞ்ஞானி ஆவார் .

‘வித்யா நடிப்பின் மீதான தன்னுடைய அணுகு முறையில் மிகவும் கவனத்துடன் இருந்தார். திரை உலகின் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதில் ஏகப்பட்ட ஆர்வம் காட்டி வந்தார். காரைக்குடியில் நடந்த படப்பிடிப்பில் அவர் காட்டிய ஆர்வமும் ஈடுபாடும் பெருமைக்குரியது’ என்று அவரது அறிமுகத்தைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் இயக்குநர் விஜய் .

குருத்தணு உயிரியல் (Stem cell biology) என்ற பிரிவில் ஆராய்ச்சியாளராக இருக்கும் வித்யா தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பொது, “சைவம் போன்ற ஒரு கண்ணியமான குடும்பக் கதை இழைந்தோடும் படத்தில் அறிமுகமாவது எனக்கு பெருமையே. கண்பார்வையை ஒளிர வைக்கும் cornea வகை தொழில்நுட்பத்தின் மூலம் மக்களுக்கு சேவை செய்வதே என் குறிக்கோள்” என்றார்.

நடிப்பைத் தொடருவீர்களா என்ற கேள்விக்குப் புன்னகையோடு, “சைவம் போல படங்கள் என்றால் நிச்சயம் நடிப்பேன்” எனக் கூறினார் .