சைவம் விமர்சனம்
சைவம் என்ற தலைப்பு மதத்தைக் குறித்ததல்ல. புலால் மறுப்பைப் பேசுகிறது. ஒரு குடும்பம் எப்படி ஏன் சைவ உணவு பழக்கத்திற்கு மாறுகிறது என்பதுதான் கதை. இக்கதையை இயக்குநர் ஏ.எல்.விஜய்க்குச் சொன்னது அவர் தாயார் என்பதை படம் முடிவில் குறிப்பிடுகிறார்.
தமிழ்ச்செல்வி தனது செல்லப் பிராணியான பாப்பா எனும் சேவல் பலி கொடுக்கப்படக் கூடாதென அதனை மறைத்து வைக்கிறாள். வீட்டிலிருப்பவர்கள் அச்சேவலை கண்டுபிடித்து பலி கொடுக்கிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு.
சைவம் ஒரு அழகான ஃபேமிலி டிராமா. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் படம் நகர்கிறது. சேவலை விடவும், படத்தின் முக்கிய பங்கு வகித்திருப்பது நாசர் குடும்பம் வசிக்கும் அந்தச் செட்டிநாடு வீடுதான். அவ்வீட்டின் தொழுவம், மாடி, பரண் என அனைத்துமே கதைக்கு உதவும் முக்கிய பங்கு வகிக்கிறது. சினிமாவிற்கு சம்பந்தமே இல்லாத முகங்களாகப் பார்த்து, கதாபாத்திரங்களுக்குப் பொருந்த...