32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கணவரைத் தேடும் நயன்தாரா

Dinesh R சேலம் Published: 09/02/2014 1 நிமிட வாசிப்பு Updated: 10/02/2014 சினிமா
எழுத்து அளவு:

Nayan

ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ‘கஹானி’ திரைப்படம் தமிழில் “நீ எங்கே என் அன்பே!” என்ற பெயரில் உருவாகி வருகிறது. காணாமல் போன தன் கணவனைத் தேடி நகருக்கு வரும் ஓர் அபலை பெண்னைச் சுற்றி நடைபெறும் பரபரப்பான இந்தக் கதையில் நயன்தாரா கதை நாயகியாக நடித்திருக்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஹிந்தியில் வித்யா பாலன் ஏற்று பெரும் புகழை பெற்ற இந்த பாத்திரத்துக்கு நயன்தாரா மேலும் மெருகு ஊட்டி உள்ளார். சுவாரசியமான திருப்பங்களும், வித்தியாசமான கதைக் களமும் கொண்ட இந்தப் படம் இதன் ஹிந்தி பதிப்பான ‘கஹானி’ படத்துக்கு இணையாக பெயரும் புகழும் ஈட்டும் என இந்தப் படத்தின் இயக்குநர் சேகர் கம்முளா நம்பிக்கை தெரிவித்தார்.

வயா காம் 18 motion pictures தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது. படத்தின் ட்ரெயிலர் வெளியீடு வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.