32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சத்யராஜின் ‘கிட்னாப் – திரில்லர்’

Dinesh R சேலம் Published: 22/07/2016 2 நிமிட வாசிப்பு Updated: 23/07/2016 சினிமா
எழுத்து அளவு:

Nathambal Film Factory

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ரசிக்கும்படி திரையில் கொண்டு வருவது சத்யராஜின் பாணி. அதுவே அவரை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமாக இருந்தால்? படத்தை அவரே, நாதாம்பாள் பிலிம் பாக்டரி சார்பாகத் தயாரித்து நடிப்பார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

“இயக்குநர் கார்த்திக் என்னிடம் வந்து கதையைச் சொன்ன அடுத்த நொடியே, இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அந்த அளவிற்கு இந்தப் படத்தின் கதையானது என்னைக் கவர்ந்துவிட்டது. இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் புதுமுகமாக இருந்தாலும், அவரின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்தப் படத்திற்குப் பக்கபலமாகச் செயல்பட்டு வருகிறது. ஒரு ரேடியோ ஸ்டேஷன் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூர்ந்து ஆராய்ந்து, அதை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் யுக்தியை கார்த்திக் கையாண்டு வருகிறார். ஒரு ரேடியோ ஸ்டேஷனின் தலைமை அதிகாரியாக நான் இந்தப் படத்தில் நடித்து வருகிறேன். தொகுப்பாளர்களும், எஃப்.எம். வாடிக்கையாளர்களும் ஓயாமல் தொடர்ந்து பேசி கொண்டிருப்பதும், அதை நான் கண்காணிப்பதும், எனக்கு புதுவித அனுபவமாய் இருந்து வருகிறது. இதுவரை நான் நடித்த கதாபத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இந்தக் கதாபாத்திரம் இருக்கும். புதுமையான கதாபாத்திரம், புதுமையான கதைக்களம் என எல்லா விதத்திலும் புதுமுக இயக்குநர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருவது மேலும் சிறப்பு. தொடர்ந்து புது முக இயக்குநர்களுடன் பணிபுரிவதை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான சத்யராஜ்.

“ஒரு ரேடியோ தொகுப்பாளருக்கும் கடத்தல்காரனுக்கும் இடையே நடக்கும் சுவராசியமான சம்பவங்கள் தான் இந்தப் படத்தின் கதை கரு. சத்யராஜ் சார் என்றாலே நையாண்டியான வசனங்கள்தான். அந்த வகையில், இந்தப் படத்தில் சத்யராஜ் சாரின் நையாண்டியான வசனங்களை ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்க்கலாம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் புதுமுக இயக்குநர் கார்த்திக். சந்தோஷ் இசையமைப்பாளராகவும், ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.