32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நீயும் பொம்மை நானும் பொம்மை

Dinesh R சேலம் Published: 07/05/2016 1 நிமிட வாசிப்பு Updated: 11/05/2016 சினிமா
எழுத்து அளவு:

Marana Gaana Viji

போகிற போக்கில் அடித்தட்டு மனிதர்களின் மன வேதனையையும் குமுறல்களையும் மட்டுமல்ல; மனித வாழ்வையும் மாபெரும் தத்துவங்களையும் சொல்லிவிடக் கூடிய தன்மை கானா பாடல்களுக்குண்டு.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வாழும்போது வைக்காதடா சேத்து – ஏதும்
அனுவிக்காம போய்டுவேடா செத்து!

மரண கானாவின் சில வரிகள் இவை. வேறெந்த இசைவடிவத்திலும் சாத்தியமில்லாத ஒன்று கானா பாடலில்தான் அமைந்திருக்கிறது. இசைக் கருவிகள் என்று எதுவுமில்லாமல் மேஜை, பஸ்ஸின் ஏறுமிடம், பஸ்ஸின் உச்சி, டிஃபன் பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எதுவேண்டுமானாலும் செட்டாகுமாறு இருப்பதே கானா பாடல்களின் தனிச் சிறப்பு. அந்த கானா எனப்படும் உலகில் அரசர்களாகத் திகழும் கானா பாலாவும் மரண கானா விஜியும் முதல் முறையாக இணைந்து, விகோசியா மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’ திரைப்படத்தில் காதல் பற்றிப் பாடல் எழுதிப் பாடி நடித்துள்ளனர். சுகுமாரின் இசையில் உருவாகியுள்ள இவர்கள் இருவரின் கானா பாடல்களும் பேசப்படும் பாடல்களாக இருக்கும் எனப் பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில், ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற பாடலை மரண கானா விஜியும், செல்ஃபோனுடன் இணைத்து இந்தக் காலக் காதலை இணைத்து ‘ஸ்மார்ட் போன்’ என கானா பாலாவும் பாடி நடித்துள்ளார். மக்களின் பெரும் ஆர்வத்தைத் தூண்டிய வண்ணம் உள்ள இந்தத் திரைப்படம், மே 13 ஆம் தேதி வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.