32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பாஷா இன் ‘சைவம்’ – இயக்குநர் விஜய்

Dinesh R சேலம் Published: 27/01/2014 2 நிமிட வாசிப்பு Updated: 27/03/2014 சினிமா
எழுத்து அளவு:

சைவம் என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார் இயக்குநர் விஜய். பொதுவாகவே படத்தின் தலைப்புக்கு மிகவும் மெனக்கெடுபவர் அவர். அது போலவே, தன்னுடைய படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான பெயர் சூட்ட விரும்பினார். பல்வேறு பொருத்தமான பெயர்களின் பரீசிலித்த பிறகு, நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் உதவியோடு ‘ பாஷா’ என பெயர் இட்டு ள்ளார். Guddu என்று செல்லமாக அழைக்கப்படும் ‘ பாஷா’ அறிமுகப் படத்திலேயே இயக்குநரை பாராட்டுப் பத்திரம் வாசிக்க வைத்து விட்டார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு பொருத்தமான ஒரு கதா பாத்திரம் இருக்கும். அது நான் அவருடைய தீவிர ரசிகர் என்பாதால் மட்டுமன்று. அவர் எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் அதற்கு ஜீவன் கொடுத்து விடுபவர். என்னுடைய சைவம் படத்திலும், அவருக்கு கதையின் முதுகெலும்பான ஒரு முதியவர் பாத்திரம் உள்ளது. அந்த முதியவரின் இளம் வயது பேரனாக நடிக்க நடிகர் தேர்வு செய்யும் போது , எதேச்சையாக அவரது மகன் லுப்துபுதீனை சந்திக்கும் போது அச்சு அசலாக அந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருந்தார். நடிக்க மறுத்த அவரைப் பெற்றோரின் சம்மதத்தோடு நடிக்க வைத்தேன் . அவரை காமிராவில் பார்த்த போது ‘ நாயகன் ‘ நாசரை நினைவு படுத்தினார். அவரது தோற்றப் பொலிவு ஒரு புறம் இருக்க, அவரது திறமையும் கண்ணியமும் என்னை மிகவும் கவர்ந்தது . இதற்கான பெருமையில் அவருடைய பெற்றோருக்கு பெரும் பங்கு உண்டு. கண்ணியமான பெற்றோரின் வளர்ப்பு அவரது ஒவ்வொரு நடவடிக்கையிலும் புலப்படுகிறது’ என்று கூறும் போதே இயக்குநர் விஜய்யின் குரலில் பெருமிதம் பொங்குகிறது.

 

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க