32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வர்ஷனின் புறம்போக்கு இசை

Dinesh R சேலம் Published: 11/04/2015 2 நிமிட வாசிப்பு Updated: 12/04/2015 சினிமா
எழுத்து அளவு:

புறம்போக்கு

“படத்தின் தலைப்பே அனைவரின் கவனத்தை ஈர்த்து அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுது. அந்த எதிர்பார்ப்புக்கு ஈடேற்றும் வகையில் இசையமைப்பது எனக்குப் பெரும் சவாலாக அமைந்தது. எனினும் ஒரு புதுமுகத்திற்கு.. தேசிய விருது பெற்ற இயக்குனரின் திரைப்படத்திற்கோ, UTV போன்ற பெரிய நிறுவனத்தின் படத்திலோ வாய்ப்புக் கிடைப்பது அபூர்வம். ஜனநாதன் சார் இப்படம் முழுவதும் என்னை வழி நடத்தி என்னை இசையமைப்பாளராக உருவாக்கியுள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

Music director Varshanலண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து பின் இந்தியப் பாரம்பரிய இசையை சென்னை இசைக் கல்லூரியில் பயின்றேன். என்னுடைய சில பாடல்கள் ஜனநாதன் சார் அவர்களுக்குப் பிடித்திருந்தது. அதனால் எனக்கு ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தில் வாய்ப்பளித்தார். இப்படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும், ஜனநாதன் சாரின் திரைக்கதைக்கு உறுதுணையாய் இருக்கும் வண்ணம் அமைய வேண்டும் என்று நினைவில் வைத்துக் கொண்டு இசையமைத்தேன். படத்தின் பின்னணி இசையும் நன்றாக வந்துள்ளது.

ஒரு இயக்குநரிடம் வேலை புரிவது மிகவும் புதிதாக இருந்தது. ஒரு தனித்த இசை கலைஞனாய் வேலை செய்வது மிகவும் எளிது. ஆனால் ஒரு இசையமைப்பாளர் ரசிகர்களின் ரசனைக்கேற்ப இசையமைக்க வேண்டும். ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படம் என்னை ஒரு இசையமைப்பாளராய் மேலும் மெருகேற்றியது. படத்தின் இசை 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. பாடல்கள் அனைத்தும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” எனத் தன்னிசையைப் போல் இனிமையுடன் கூறினார் இளம் இசையமைப்பாளர் வர்ஷன்.

படம் மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.