32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

1 பந்து 4 ரன் 1 விக்கெட் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 06/12/2014 2 நிமிட வாசிப்பு Updated: 23/01/2015 சினிமா
எழுத்து அளவு:

1 pandhu 4 run 1 wicket review

யோசிக்கவே விடாமல் வயிறைப் புண்ணாக்கச் செய்யும் நகைச்சுவை பேய்ப் படம். 1 பந்தில் 4 ரன் எடுத்தா இந்தியா பாகிஸ்தானை ஜெயித்துவிடும். அந்த நேரத்தில் காதம்பரி தூக்கில் தொங்கி உயிரைவிடுகிறாள். இதான் படத்தின் தலைப்புக்குக் காரணம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

வீட்டை விட்டு ஓடி வரும் ரம்யாவை அழைத்துக் கொண்டு, தற்காலிமாகத் தங்க ஒரு பங்களாவிற்குச் செல்கிறான் விஸ்வா. ரம்யா உடம்புக்குள் பேய் புகுந்து விடுகிறது. யாராவது ரம்யாவைத் தொட்டால் பேய் விழித்துக் கொள்ளும். அந்த பங்களாவை விட்டு யாரையும் வெளியிலும் போகவிடாமல் அனைவரையும் பங்களா அரெஸ்ட் செய்து விடுகிறது பேய். பின் என்னானது என்பதுதான் கதை.

Hashika Dutt ஹஷிகா தத்நாயகனாக வினய் கிருஷ்ணா எனும் ஆந்திராவாலா அறிமுகமாகியுள்ளார். லிப் சின்க் பிரச்சனை கூட இல்லாமல் அழகாக கதாபாத்திரத்திற்குப் பொருந்தியுள்ளார். நாயகியாக ஹஷிகா தத். நாயகி பாத்திரத்துக்குப் பொருந்துவதைவிட பேய் பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார்.

சென்ட்ராயன், லொள்ளு சபா ஜீவா, நாதஸ்வரம் புகழ் முனிஸ் ராஜா, சுப்புராஜ் என நகைச்சுவைக்கு குறைவில்லாத கதாபாத்திரங்கள். விறுவிறுன்னு ஓடும் திரைக்கதை. முக்கியமாக இடைவேளைக்கு பின்னான படம் செம கலக்கல். வரிசையாக வந்து பேயிடம் வாங்கிக் கட்டிக் கொள்கின்றனர். அதிலும் சென்ட்ராயன், சிங்கதுரை எனும் பாத்திரத்தில் அசத்தியுள்ளார்.

அறிமுக இயக்குநரான வீரா, அதிகம் மெனக்கெடாமல் படத்தைக் கலகலப்பாகியுள்ளார். ‘ப்ரேமகதா சித்திரம்’ என்ற தெலுங்குப் படத்திலும் நாயகன் நாயகி ஒரு பங்களாவில் தஞ்சமடைவர்; நாயகி உடம்பில் பேய் புகுந்துவிடும்; நாயகியைத் தொடும் பொழுதெல்லாம் பேய் விழித்துக் கொள்ளும். இயக்குநர் இந்த மையக் கருவை மட்டும் உருவி முழு நீள நகைச்சுவைப் படமாக மேம்படுத்தியுள்ளார். ஆனால், நீங்கள் எவ்வளவு பெரிய அப்பாடக்கராக இருந்தாலும், பேயின் நிறைவேறாத ஆசை என்னவென்று தெரிந்தால், ‘யிய்ய்யீ..’ என காண்டாவது மட்டும் உறுதி. இயக்குநரின் தைரியமான குசும்புக்கு ஒரு சபாஷ்!

1 pandhu 4 run 1 wicket review

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.