32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

45 – அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாண்டல்வுட் படம்

Dinesh R சேலம் Published: 10/12/2025 2 நிமிட வாசிப்பு அயல் சினிமா
எழுத்து அளவு:

சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய படைப்பான ‘45: த மூவி’ படத்தில், கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, நடிகரும் இயக்குநருமான ராஜ் பி. ஷெட்டி ஆகிய முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்-இயக்குநர் அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்தப் படம் டிசம்பர் 25 ஆம் தேதி பிரம்மாண்டமாகத் திரையிடப்படத் தயாராகியுள்ளது. ஏற்கெனவே வெளியான போஸ்டர், டீசர், கிளிம்ப்ஸ் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கன்னடத் திரைப்பட வரலாற்றில் அண்மையில் உருவான மிகத் துணிச்சலான மற்றும் புதுமை நிறைந்த முயற்சிகளில் ஒன்றான “45: த மூவி” படைப்பு, தனது கதை உலகத்தையும், புதுமையான திரைக்கதை வடிவத்தையும் ட்ரைலர் வெளியீட்டின் வாயிலாக முழுமையாக அறிமுகப்படுத்த உள்ளது. டிசம்பர் 15-ஆம் தேதி ட்ரைலர் வெளியாகவுள்ளது.

சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி ஆகியோரின் புதுமையான லுக்குகளை மையப்படுத்திய அறிவிப்பு போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மிகப்பெரிய ரிலீஸிற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்களான டாக்டர் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டி’சூசா ஆகியோர் வடிவமைத்த அதிரடி காட்சிகள், சத்யா ஹெக்டேவின் கவர்ச்சியான ஒளிப்பதிவு, கே.எம். பிரகாஷின் துல்லியமான படத்தொகுப்பு ஆகியவை படத்தின் தரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்கின்றன. அனில் குமார் எழுதிய வசனங்களும் ஜானி பாஷா அமைத்துள்ள ஆற்றல்மிக்க நடனக் காட்சிகளும் படத்திற்குக் கூடுதல் வலிமையைக் கூட்டியுள்ளன.

நடிகர்கள்:-

சிவ ராஜ்குமார்
உபேந்திரா
ராஜ் பி. ஷெட்டி

தொழில்நுட்பக் குழு:-

தயாரிப்பு நிறுவனம் – சுரஜ் புரொடக்ஷன்
தயாரிப்பாளர்கள் – திருமதி உமா ரமேஷ் ரெட்டி, எம். ரமேஷ் ரெட்டி
கதை இசை இயக்கம் -அர்ஜுன் ஜன்யா
ஒளிப்பதிவு -சத்யா ஹெக்டே
படத்தொகுப்பு – கே.எம். பிரகாஷ்
சண்டைப்பயிற்சி – டாக்டர் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டி’சூசா
நடனம் – ஜானி பாஷா
வசனம் – அனில் குமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.