32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

‘ஒழுக்கம் முக்கியம் மகனே!’ – சமுத்திரக்கனி

Dinesh R சேலம் Published: 04/06/2016 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

Kolanji Movie

தன் இஷ்டம் போல் வாழ நினைக்கும் 12 வயது சிறுவனுக்கும், பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டுமென நினைக்கும் அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமும் இதனால் ஏற்படும் விளைவுகளும்தான் “கொளஞ்சி” படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சிம்புதேவன், நவீன் ஆகியோர்களிடம் பணியாற்றிய தனராம் சரவணன் “கொளஞ்சி” படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். ஒய்ட் ஷடோஸ் புரோடக்ஷன்ஸ் சார்பாக நவீன் “கொளஞ்சி” படத்தைத் தயாரிக்கின்றார். இவர் மூடர்கூடம் என்ற படத்தைத் தயாரித்து இயக்கிப் பலரின் பாராட்டைப் பெற்றவர்.

சமுத்திரக்கனி, சங்கவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நசாத், ரஜின்.எம், பிச்சைகாரன் மூர்த்தி, ருஜீல் கிருஷ்ணா, நாடோடிகள் கோபால், ரேகா சுரேஷ், ஆதிரா ஆகியோர் நடிக்கின்றனர்.

ராசிப்புரம், கோக்கராயன் பேட்டை போன்ற பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது “கொளஞ்சி” படத்தின் இறுதுக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறவுள்ளதாகத் தயாரிப்புத் தரப்புக் கூறியுள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.