32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சிங்கையில் ரெமோ

Dinesh R சேலம் Published: 27/06/2016 2 நிமிட வாசிப்பு Updated: 27/09/2016 சினிமா
எழுத்து அளவு:

REMO in Singapore

சிவகார்த்திகேயனும் கீர்த்தி சுரேஷும் நடித்திருக்கும் ரெமோ, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில், புதுமுக இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள ‘ரெமோ’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரும், அனிருத் இசையமைத்த ‘ரெமோ நீ காதலன்’ பாடலும் கடந்த வியாழன் அன்று சென்னையில் மிக விமர்சையாக வெளியிடப்பட்டது. பிரம்மாண்டத்தின் மறு ரூபமான இயக்குநர் ஷங்கர் தலைமை தாங்கிய இந்த விழாவானது, ஒட்டுமொத்த திரையுலகக் கண்களையும் ‘ரெமோ’ மீது திரும்புமாறு செய்திருக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படி ஒரு பாடலின் வெளியீட்டையே, மிகப் பிரம்மாண்டமாக வெகு விமரிசையாகக் கொண்டாடிய படக்குழுவினர், வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி சிங்கப்பூரிலும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த உள்ளனர். சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் இடையே வெகு பிரபலமான சிவகார்த்திகேயனுக்கு அங்கு சிறப்பான வரவேற்புக்குக் காத்துக் கொண்டிருக்கிறது. ‘ரெமோ’ திரைப்படத்தின் மற்றொரு பாடலான ‘செஞ்சிட்டாளே’ பாடல், சிங்கப்பூரில் நடைப்பெற்று வரும் SIIMA விழாவில் வெளியிடப்பட உள்ளது. பாடல் வெளி வருவதற்கு முன்னரே அந்தப் பாடலின் முதல் வரி, சமூக வளைதளங்களில் பிரபலமாகி பிரசித்திப் பெற்றதுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூலை ஒன்றாம் தேதி சிங்கப்பூரில் நடைப்பெற இருக்கும் இந்த ரெமோ படத்தின் ‘செஞ்சிட்டாளே’ பாடல் வெளியீட்டு விழாவில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், இசையமைப்பாளர் அனிருத், P.C.ஸ்ரீராம், ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி, நடிகர் சதீஷ் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் பங்கு பெறுவது, ரசிகர்களின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் வானளவு உயர்த்தி இருக்கிறது. ரெமோ மீது காதல் வயப்பட்டு, அவரை ஆர்வத்தோடு வரவேற்க பரபரப்புடன் உள்ளது சிங்கப்பூர்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.