32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கலைஞரின் ஆன்மா – ஆண் தேவதை

Dinesh R சேலம் Published: 10/08/2018 2 நிமிட வாசிப்பு Updated: 11/08/2018 சினிமா
எழுத்து அளவு:

Aan-devadhai---Kalainjars-soul

சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் இயக்குநர் தாமிராவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான “ஆண் தேவதை” படத்தின் இசை வெளியீடு 10ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தமிழினத் தலைவர் கலைஞர் இயற்கை எய்த இந்த நேரத்தில் நிகழ்ச்சி வேண்டாம் என்று படக் குழுவினர் ஒருமித்தமாகக் கூடி முடிவு செய்து உள்ளனர். இது குறித்து “ஆண் தேவதை” திரைப்படத்தின் திரையரங்கு விநியோக உரிமை பெற்ற நியூ ஆர் எஸ் எம் பிலிம் ப்ரொடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் நிறுவனர் மாரிமுத்து கூறுகையில், “ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கு இந்தக் காலகட்டம் சோதனையானது. கலைஞர் அவர்கள் தமிழ்த்திரை உலகிற்குச் செய்த சேவைகளும் சாதனைகளும் அதிகம். ‘ஆண் தேவதை’ இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மிக விமரிசையாக நடைபெற்று கொண்டு இருந்த கட்டத்தில் தான் கலைஞர் அவர்களின் மறைவு செய்தி இடி போல தாக்கியது. கடைசி நேர மாற்றம் செய்யவேண்டிய கட்டாயம். கலைஞர் அவர்களுக்கு மரியாதை என்று வரும் போது இந்த இடையூறுகள் பெரிய விஷயமா என்ன என்று எண்ணியாவாறே நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டோம். ஆனாலும் இசை வெளியீடு தொழிற்நுட்ப முறை கட்டாயத்தில் இன்று வெளிதாவதைத் தவிர்க்க முடியாதது என்று இசை உரிமையைப் பெற்ற சரிகம நிறுவனம் கூறியபோது மறுக்க முடியவில்லை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தமிழ்ச் சமுதாயத்துக்கு மிக நல்ல கருத்துகளைச் சொல்லும் இந்தப் படத்துக்கு, நம்மைச் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டுச் சென்ற கலைஞரின் ஆன்மா ஒரு ‘ஆண் தேவதை’ போல் இருந்து ஆசிர்வதிக்கும் என்று நம்புகிறேன். எல்லோருக்கும் உகந்த மற்றுமொரு நாளில் இசை விழா நடைபெறும்” என்று தெரிவித்தார் மாரிமுத்து.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.