32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

வார்டு 126 – 4 கதாநாயகிகள் நடக்கும் ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர்

Dinesh R சேலம் Published: 18/07/2022 3 நிமிட வாசிப்பு Updated: 19/07/2022 சினிமா
எழுத்து அளவு:

SSB டாக்கீஸ் தயாரிப்பில் செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வார்டு 126’. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் விதமாக ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் ஆக இது உருவாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, நாயகர்களாக மைக்கேல் தங்கதுரை மற்றும் ஜிஷ்ணு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சோனியா அகர்வாலும், ஸ்ரீமனும் ஆகியோர் நடித்துள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

எஸ்.கே. சுரேஷ் குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள படத்திற்கு வருண் சுனில் இசையமைத்துள்ளார். இவர் சூப்பர் ஹிட்டான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு இசையமைத்தவர். படத்தொகுப்பை தியாகு கவனிக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் செல்வகுமார் செல்லப்பாண்டியன், “ஒவ்வொரு துறையிலும் இருண்ட பக்கங்கள் இருக்கிறது. அதே போல் நான் ஐடி துறையில் பணியாற்றிய போது என் கண் முன்னரே நடந்த அதன் இருண்ட பக்கங்களின் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளேன். வார்டு 126 என்ற தலைப்பு ஒரு முடிவின் தொடக்கமாக இருக்கும்.

படத்தைத் துவங்கிய சமயத்தில் தான் கொரோனா தாக்கம் ஆரம்பித்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி பல சவால்களைச் சந்தித்துப் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். கதை நிகழும் களமான சென்னை, பெங்களூர் மற்றும் டில்லி அருகிலுள்ள நொய்டா ஆகிய இடங்களிலும் பாடல்களைப் பாண்டிச்சேரியிலும் படமாக்கியுள்ளோம்.

இந்தக் கதையில் நடித்துள்ள நாயகிகள் அனைவருக்குமே சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கதையைக் கேட்கும்போதே உடனே ஒப்புக் கொண்டதுடன் ஒரு புதுமுக இயக்குநர் என்கிற எந்த தயக்கமும் இல்லாமல் படப்பிடிப்பில் மிகுந்த ஒத்துழைப்பு தந்தனர்.

விரைவில் இந்தப் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இந்தக் காத்திருப்பு காலத்தில் ஏற்கெனவே கொரோனோ தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புடன் இன்னும் கூடுதல் சுமை தான் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதனால் தியேட்டர்களில் வெளியிட்டு உடனடியாக முதலீட்டைத் திரும்பப் பெறுவதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும் என முடிவு செய்துவிட்டோம். விநியோகஸ்தர்கள் சிலருடன் பேச்சு வார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தவிர இந்தப் படமும் திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் விதமான படமாகத்தான் உருவாகியுள்ளது.

அதே சமயம் ஓடிடியில் படத்தை வெளியிடுவதற்கான வாசலையும் திறந்தே வைத்துள்ளோம். பொதுவாக ஓடிடியில் படத்தை வெளியிடுவது சுலபம் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடுவதற்கு நீண்ட நாள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. காரணம் இந்த முறையில் படத்தை வெளியிடுவதற்கும் பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன” என்றார்.

பல வெற்றிப் படங்களை வெளியிட்ட ஆக்சன் ரியாக்சன் ஜெனீஷ் இத்திரைப்படத்தைப் பார்த்துப் பிரமிப்படைந்து, இம்மாத இறுதியில் உலகம் முழுவதும் திரையிட உள்ளார்.

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு – SSB டாக்கீஸ்
வெளியீடு – Action Reaction Films ஜெனீஷ்
இயக்கம் – செல்வகுமார் செல்லப்பாண்டியன்
இசை – வருண் சுனில்
ஒளிப்பதிவு – எஸ்கே சுரேஷ்குமார்
படத்தொகுப்பு – தியாகு
கலை – பழனிவேல்
சண்டை – Danger மணி
பாடல் – உமாதேவி
மக்கள் தொடர்பு – A. ஜான்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.