32°C
விளம்பரம்
Advertisement
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் Many Many Happy Returns

Dinesh R சேலம் Published: 15/11/2026 2 நிமிட வாசிப்பு Updated: 20/11/2026 சினிமா
எழுத்து அளவு:

இயக்குநர் அஹம்மது கபீர் இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ் (Many Many Happy Returns)’ வரும் டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வப் போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

காதல், நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் நம் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. நகைச்சுவை, காதல், இசை என அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் உறவுகளின் அழகையும், நமக்குப் பிடித்தமான மனிதர்கள் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் படமாக ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ உருவாகியுள்ளது. கடந்து வந்துவிட்டதாக நினைக்கும் சில உறவுகளும், முடிவடையாத சில அத்தியாயங்களும் நம் நினைவுகளில் தொடர்ந்து பயணிப்பதை இப்படம் பேசுகிறது.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், லட்சுமி ஜோதிஷ், லால், பொப்பன் அலுமூடன், சஞ்சு சானிச்சென், சோசம்மா மற்றும் ரெஞ்சித் சேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஹம்மது கபீர் மற்றும் ஹசன் ரஷீத் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் கதையை அஹம்மது கபீர் எழுதியுள்ளார். ஜாபின் ஜான் மற்றும் அஹம்மது கபீர் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.

ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மகேஷ் புவனேந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். விஷ்ணு கோவிந்த் ஒலிப்பதிவுப் பணியையும், மஷார் ஹம்சா ஆடை வடிவமைப்பையும், ரோனெக்ஸ் சேவியர் ஒப்பனைப் பணியையும் மேற்கொண்டுள்ளனர். அனு விஸ்வநாதன் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

‘ஜூன்’ (2019), ‘மதுரம்’ (2021) ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஹம்மது கபீர், ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘கேரளா க்ரைம் ஃபைல்ஸ்’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்களையும் இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் காதல், நட்பு, குடும்பம் மற்றும் பழைய நினைவுகளை மையமாகக் கொண்ட வித்தியாசமான ரொமாண்டிக் காமெடி அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்த் திரையுலகில் தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோகப் பணிகளில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இப்படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களைத் தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வரும் ரோமியோ பிக்சர்ஸ், ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தையும் தமிழகத் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.