32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

A1 – எந்த சர்ச்சையும் இல்லாக் காதற்படம்

Dinesh R சேலம் Published: 23/07/2019 3 நிமிட வாசிப்பு Updated: 26/07/2019 சினிமா
எழுத்து அளவு:

a1-santhanam-tara

சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. இப்படம் வரும் ஜுலை 26 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி.செளத்ரி வெளியிடுகிறார். அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “சூது கவ்வும் படத்திற்குப் பிறகு எனக்கு மிகப் பிடித்த படம் இது. ஈக்குவாலிட்டி பற்றிய படங்கள் எப்பவாவது வரும். இந்தப் படமும் சமத்துவத்தை ஜாலியாகப் பேசி இருக்கிறது. அந்த வகையில் படத்தைச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒரு காமெடி நடிகர் தன்னை நிலைத்துக் கொண்டு மக்களை என்டெர்டெய்ன் பண்றது ரொம்பக் கஷ்டம். அதைச் சந்தானம் சார் சரியாகச் செய்து வருகிறார். இந்தப் படத் தயாரிப்பாளரிடம் ஒரு சந்தோஷம் இருக்கிறது. காரணம் இந்தப் படம். தியேட்டரிகல் எக்ஸ்பிரீயன்ஸில் இந்தப் படம் நல்லா இருக்கும் என்று நம்பிக்கை இருக்கு. படத்தின் டீசரை வைத்து சில சர்ச்சைகள் வந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாகப் படம் இருக்கும்” என்றார்.

இயக்குநர் ஜான்சன் பேசும்போது, “சந்தானம் சார் எந்த ஷாட் எடுத்தாலும் மானிட்டர் வந்து பார்ப்பார். திடீரென்று சில நாட்கள் அவர் வரவில்லை. எனக்குப் பயமாக இருந்தது. பின் தான் தெரிந்தது அவர் என்னை நம்ப ஆரம்பித்து விட்டார் என்று. நிச்சயமாக சந்தானம் சார் இல்லை என்றால் நான் இல்லை. நீங்கள் படத்தை காசு கொடுத்த நம்பி வந்து பார்க்கலாம். ஆர்ட் டைரக்டர் ராஜா பிரில்லியண்டாக வொர்க் பண்ணி இருக்கிறார். எடிட்டிங்கில் லியோன் ஜான் பால் அசத்தி இருக்கிறார். அவர் முன்னாளில் கேங்ஸ்ட்ராக இருந்திருப்பார் போல. நிறைய காட்சிகளை வெட்டிவிட்டார்” என்றார்.

சந்தானம் பேசும்போது, “தில்லுக்கு துட்டு 2 படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு முதல் நன்றி. ஜான்சன் கதையைச் சொன்னதும் சரி பண்ணலாம் என்று சொன்னேன். 2000 இல் டீவில அறிமுகமானேன். இப்போ வரைக்கும் ஓரளவு நான் தாக்குப்பிடிச்சுப் போகுறேன்னா அதுக்குக் காரணம் என் டீம் தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை. என் டீமில் இருந்த ஜான்சன் இப்போ டைரக்டராகி இருக்கார். ராஜ் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். ஜான்சன் பயங்கர ஷார்ப்பு. விசாயர்பாடில பிறந்து வளர்ந்த ஆளு. அங்க உள்ள கதையைத்தான் படமாக்கி இருக்கார். இது சூது கவ்வும் பேட்டர்ன்ல ஒரு படம். எனக்கு இந்தப் படம் ரொம்பப் புதுசு. சந்தோஷ் நாராயணன் வந்த பிறகு இந்தப் படத்தின் கலரே மாறிவிட்டது. சந்தோஷ் சாரிடம் நான் கதை எப்படி இருக்குன்னு கேட்டேன். ‘கதை நல்லாருக்கு சார் கண்டிப்பா நான் பண்றேன்’ என்றார். படத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கார். கேமரா மேன் ரொம்ப அழகா காமிச்சிருக்கார். லைட் எதுவுமே இல்லாமல் வெறும் தெர்மாகோல் வைத்தே அழகாகக் காட்டும் திறமைசாலி அவர்.

ஒரு பிராமின் கேர்ளுக்கும் லோக்கல் பையனுக்கும் நடக்குற கதை என்பதற்காக சரியான ஹீரோயின் வேணும் என்று தேடினோம். நாங்கள் நினைத்ததை தாரா சரியாகச் செய்திருக்கிறார்.

நாம ஆசைப்பட்டா மாதிரி ஒரு இடத்தை அடையணும்னா நம்மை சுத்தி இருக்கிற குடும்பம், நண்பர்கள் எல்லாரும் நாம நல்லா இருக்கணும்னு நினைச்சா தான் முடியும். என்னைச் சுற்றி அப்படியான ஆட்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார். மேலும் படத்தில் வேலை செய்த அத்தனை நபர்களின் பெயர்களையும் சொல்லி சந்தானம் நன்றி சொன்னார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.