Shadow

Author: Inbaaraja

”50-வது படம் வரை வந்திருக்கிறேன் என்றால் எல்லோரின் திட்டும் பாராட்டும் தான் காரணம்” – விஜய் சேதுபதி

”50-வது படம் வரை வந்திருக்கிறேன் என்றால் எல்லோரின் திட்டும் பாராட்டும் தான் காரணம்” – விஜய் சேதுபதி

சினிமா, திரைத் துளி
’தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டுடியோஸ் கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.நடிகர் வினோத், "'ராட்சசன்' பட டீச்சரில் இருந்து ரிட்டையர்ட் ஆக வேண்டும் என நானும் நீண்ட நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான கதையாக 'மகாராஜா' அமைந்துள்ளது. சேது அண்ணாவுடன் எனக்கு மூன்றாவது படம் இது. அவரின் வளர்ச்சி கடின உழைப்பால் படிப்படியாக வந்தது. அவருடைய சுறுசுறுப்பு நம் சோம்பேறித்தனத்தை தூர விரட்டி விடும். அனுராக் கஷ்யப் சாரிடம் நிறையக் கற்றுக் கொண்டேன். அபிராமி, மம்தா மோகன்தாஸ் இருவர் கூடவும் வேலை பார்த்தது மகிழ்ச்ச...
ஹரா விமர்சனம்

ஹரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கல்லூரிக்குப் படிக்கப் போன இடத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகும் தன் மகளின் மரணத்தின் பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்க்க பயணப்படும் ஒரு தந்தையின் பயணமே இந்த “ஹரா” திரைப்படம்.“மைக் மோகன்” என்றும் “வெள்ளிவிழா நாயகன்” என்றும் புகழப்படும் நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நாயகனாக நடித்திருக்கிறார். இளமை காலங்களிலேயே அவர் ஆக்‌ஷன் எல்லாம் அவ்வளவாக செய்த்தே இல்லை. வயோதிகத்தில் அழைத்து வந்து வலுக்கட்டாயமாக ஆக்‌ஷன் காட்சிகளை கொடுத்திருக்கிறார்கள். அவரது உடலும் வயதும் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. கதை நாயகனாகவும், காதல் நாயகனாகவும் அறியப்பட்டவரை கமர்ஸியல் நாயகனாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி கை கொடுக்கவில்லை.அப்பாவிற்கும் மகளுக்குமான பாசப் பிணைப்பிற்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அனைத்துமே அயர்ச்சியைக் கொடுக்கின்றன. துடுப்பற்ற ஓடம் போல் தி...
கீர்த்தி சாந்தனு துவக்கி வைத்த கண்காட்சி

கீர்த்தி சாந்தனு துவக்கி வைத்த கண்காட்சி

சினிமா, திரைச் செய்தி
சென்னையில் இந்த கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடவும், வீட்டுக்குப் பெண்களுக்கு குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் வகையில், திருவான்மியூரில், தேசிய கைத்தறி & கைவினைப் பொருட்கள் கண்காட்சி இன்று துவங்கியது.சின்னத்திரை புகழ் கீர்த்தி சாந்தனு இந்த கண்காட்சியினை துவக்கி வைத்தார்.இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், முழுமையாக கைகளால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், ஆடை, அணிகலன்கள், வீட்டுக்கு தேவையான அழகு சாதன பொருட்கள், பேக்ஸ், பர்னிச்சர்கள் என அனைத்து பொருட்களும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தோடு அனைவரும் சுற்றிப்பார்ப்பதுடன் ஜாலியாக ஷாப்பிங்கும் செய்யும் வகையில் ஒரு அருமையான வாய்ப்பாக இந்த கண்காட்சி இருக்கும்.இந்த கண்காட்சியினை திறந்து வைத்த கீர்த்தி சாந்தனு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது… இந்த அருமையான கண்காட்சியினை திறந்து வைத்ததில் மக...
“தமிழ் சினிமாவில் ஹீரோ சம்பளம் மிகப்பெரியதாகி விட்டது. ” – தயாரிப்பாளர் தனஞ்செயன்

“தமிழ் சினிமாவில் ஹீரோ சம்பளம் மிகப்பெரியதாகி விட்டது. ” – தயாரிப்பாளர் தனஞ்செயன்

சினிமா, திரைத் துளி
SRINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.இந்நிகழ்வினில்...நடிகை லக்‌ஷ்மி  ‌ராமகிருஷ்ணன் பேசியதாவது... மொத்தக்குழுவிற்கும் என் வாழ்த்துக்கள். சினிமா ஒரு பவர் புல் மீடியா. ஒவ்வொரு வாய்ப்பும் மிக முக்கியமானது. அது முடிந்த பிறகு தான் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம் எனத் தோன்றும்.  எனவே கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  இந்தக்குழுவிடம் நிறைய உழைப்பு தெரிகிறது. மதி  நடிகராக அறிமுகமாகும் படம். டிரெய்லர் நன்றாக உள்ளது,  கார்த்திக் குமாருக...
நம்மை மிரட்ட வீட்டிற்கு வரும் “அரண்மணை 4”

நம்மை மிரட்ட வீட்டிற்கு வரும் “அரண்மணை 4”

சினிமா, திரைச் செய்தி
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் "அரண்மனை 4" திரைப்படத்தை ஜூன் 21 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது.சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.கமர்ஷியல் என்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில் மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்தைத் தந்துள்ளார்.அரண்மனை 4 முந்தைய படங்களின் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய கதைக்களத்தைக் கொண்டுள்ளது, இது சரவணன் என்ற வக்கீலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சரவணன் தன் சகோதரியும் அவள் கணவனும் ...
மீண்டும் விருந்து படைக்க வரும் “போக்கிரி”

மீண்டும் விருந்து படைக்க வரும் “போக்கிரி”

சினிமா, திரைச் செய்தி
'கனகரத்னா மூவிஸ் சார்பில் எஸ்.சத்தியராமமூர்த்தி அவர்கள் தயாரிப்பில் நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா அவர்களின் இயக்கத்தில் 'தளபதி'விஜய்,அசின்,வடிவேலு,நாசர்,பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் 2007-ஆம் ஆண்டு ஜனவரி-14 பொங்கல் தினத்தன்று வெளியாகிய போக்கிரி திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.2005-இல் வெளியான இவரது முந்தைய திரைப்படமான திருப்பாச்சியின் வசூல் சாதனையை முறியடித்து, அவரது திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது போக்கிரி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.போக்கிரி திரைப்படத்தில் காதல், ஆக்க்ஷன், நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்ததனால் படம் மாபெரும் வெற்றி அடைந்தது.படத்தில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தன.இத்திரைப்படம் அப்...
ஆகாஷ் முரளிதரன் மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் பதிப்பில் வெற்றி பெற்றார்

ஆகாஷ் முரளிதரன் மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் பதிப்பில் வெற்றி பெற்றார்

சினிமா, திரைச் செய்தி
மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் என்ற மதிப்புமிக்க பட்டத்தை வெல்வதற்கான பரபரப்பான பயணம் ஜூன் 7, 2024 அன்று பரபரப்பான இறுதிப்போட்டியில் முடிவடைந்தது. அற்புதமான சமையல் சவால்கள் மற்றும் சுவையான உணவுகள் நிறைந்த ஒரு சீசனுக்குப் பிறகு, சென்னையைச் சேர்ந்த ஆகாஷ் முரளிதரன் இந்த சீசனின் ஃபைனலில் மாஸ்டர் செஃப் பட்டத்தை வென்றார். போட்டி கடுமையாக இருந்தது, திறமையான ஹோம் குக்குகளான ஜரீனா பானு, வாணி சுந்தர் மற்றும் பவித்ரா நளின் ஆகியோர் முதல் நான்கு இடங்களுக்குள் வந்தனர். ஆகாஷ், மறந்துபோன காய்கறிகளை தனது சமையல் குறிப்புகளில் இணைத்து மீண்டும் அறிமுகம் செய்ததற்காக கொண்டாடப்பட்டு அவரது அர்ப்பணிப்புக்காக புகழ்பெற்றார், சோனி LIV இல் நடந்த முதல் டிஜிட்டல் பிரத்தியேக சீசனில் தனது மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் கனவை நனவாக்கி, நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் இதயங்களை வென்றெடுத்துள்ளார்.ஆகாஷ் முரளிதரனின் பயணம் - ...
தம்பி ராமையாவின் மகன் நாயகனாக நடிக்கும் “பித்தல மாத்தி”

தம்பி ராமையாவின் மகன் நாயகனாக நடிக்கும் “பித்தல மாத்தி”

சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள "பித்தல மாத்தி" திரைப்படம் ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.இந்த திரைப்படத்தில் உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் இப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் மாணிக வித்யா அவர்களுக்கு இப்படம் ஒரு மைல் கல்லாக அமையும். ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் சார்பில் சரவணன் இப்படத்தை தயாரித்துள்ளார்.இந்த கால காதலை மையப்படுத்தி சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.ஜூன் மாதம் 11ம் தேதி திரு உமாபதி ராமையா வின் திருமணம் நடைபெற உள்ளது. இதே மாதம் 14ம் தேதி வெள...
‘டெட்பூல் & வால்வரின்’ திரைப்படத்திற்கான இந்திய முன்பதிவு தொடர்பான அறிவிப்பு

‘டெட்பூல் & வால்வரின்’ திரைப்படத்திற்கான இந்திய முன்பதிவு தொடர்பான அறிவிப்பு

சினிமா, திரைச் செய்தி
இந்திய ரசிகர்களுக்கு இந்த நண்பர்கள் தினம் மிகவும் சிறப்பானதாக 'டெட்பூல் & வால்வரி'னோடு அமைய இருக்கிறது. ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்ற பிறகு மார்வெல் ஸ்டுடியோஸ் டெட்பூல் & வால்வரின் ஐமேக்ஸ் அட்வான்ஸ் புக்கிங்கை நாளை (ஜூன் 8) ஒரு நாள் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது.கோடைக்கால கொண்டாட்டமாக ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் படம் திரையிடப்பட இருக்கிறது. படத்தில் இருந்து வெளியான முதல் டிரெய்லர், வெளியான 24 மணி நேரத்திலேயே ஆன்லைனில் 365 மில்லியன் முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. இரண்டாவது டிரெய்லர் இந்த வாரம் வெளியாகி முந்திய சாதனையை முறியடித்துள்ளது.இது LFGக்கான நேரம்!மார்வெல் ஸ்டுடியோஸின் ஐக்கானிக் சூப்பர் ஹீரோ டெட்பூல் மற்றும் வால்வரின் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூலை 26 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது....
சினிமாவில் நடிகரான பத்திரிக்கையாளர் மகன்

சினிமாவில் நடிகரான பத்திரிக்கையாளர் மகன்

சினிமா, திரைச் செய்தி
அதி வேகமான இயந்திர வாழ்க்கையில் சிக்கி பல வித போதைக்கு அடிமையாகி பாதை மாறி செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில் வெகு சிலரே தங்களின் கனவுகளை நிஜமாக்க ஓடுகிறார்கள்.அப்படி காண்கிற கனவுகளில் பிரதானமானது சினிமாவில் நடிகராவது… ஆனால் நிஜத்தில் சினிமாவை எட்டி பிடிப்பது அவ்வளவு எளிதல்ல அதற்கு பல காரணங்கள் உண்டு. திரையுலகில் நுழைவதற்கு கண்டிப்பாக சிபாரிசு, வாரிசு என பல சூழல்களில் பலர் நேபோட்டிசம் அடிப்படையில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் களத்தில் இறங்கி தோல்வி கண்டு காணாமல் போகும் காலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து கல்லூரி படிப்பை முடித்து ஒருவன் சினிமாவை அடைகிறான் என்றால் அவனுக்கு இந்த சினிமா ஏதோ ஒரு இடத்தை வழங்க காத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.அதிலும் முதல் படத்திலேயே வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக்கும் செகண்ட் இன்னிங்க்ஸ் படமான “ஹரா” படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம். அதோடு திரை...
அதகள ஆக்‌ஷனும் அட்டகாச நகைச்சுவையுமாய் BAD BOYS: RIDE OR DIE

அதகள ஆக்‌ஷனும் அட்டகாச நகைச்சுவையுமாய் BAD BOYS: RIDE OR DIE

சினிமா, திரைச் செய்தி
'பேட் பாய்ஸ்' பட வரிசையில் நான்காவது பாகமான இது, 'பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)' படத்தின் தொடர்ச்சியாகும். ஒரு போலீஸ் அதிரடி நகைச்சுவை படமான பேட் பாய்ஸ் (1995), 'பேட் பாய்ஸ் 2 (2023)' படத்திற்கு வழி வகுத்தது (2003).இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3 ஆவது படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர். இந்த 4 ஆவது படத்தையும் அதே இரட்டையர்கள் இயக்கியுள்ளனர்! 4 மடங்கு அதிரடி மற்றும் 4 மடங்கு பொழுதுபோக்கு என்ற வாக்குறுதியுடன், இந்தியாவில் ஒரு நாள் முன்னதாகவே, ஜூன் 6 ஆம் தேதி படம் வெளியிடப்படுவதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடையலாம்.உலக சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்குரிய 'பேட் பாய்ஸ்' அவர்களின் ட்ரேட் மார்க்கான, இருக்கை நுனியில் அமர வைக்கும் அதகளமான ஆக்சனுடனும் அட்டகாசமான நகைச்சுவையுடனும் திரும்பி வந்துள்ளனர் ஒரு சுவாரசியமான திருப்பத்துடன்....
அஞ்சாமை மக்களின் வலியை, மனநிலையை, உண்மையை பேசி இருக்கிறது – விதார்த்

அஞ்சாமை மக்களின் வலியை, மனநிலையை, உண்மையை பேசி இருக்கிறது – விதார்த்

சினிமா, திரைச் செய்தி
சினிமாவில் கமர்ஷியல் வெற்றியை நோக்கி பல கதாநாயகர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கதைகளை தேர்வு செய்யும் விதத்திலும் நடிப்பிலும் தனக்கென ஒரு தனி பாணியை பின் பற்றி வருகிறார் நடிகர் விதார்த். படம் வெற்றி பெறுமா, கமர்ஷியல் அம்சங்கள் இந்தப்படத்தில் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்காமல், இந்த கதையும் கதாபாத்திரமும் நம் நடிப்புக்கு தீனி போடும் விதமாகவும், மக்களுக்கு நெருக்கமான கதாபாத்திரங்களில் தன்னை பிரதிபலிப்பது போன்று தான் அவரது கதை தேர்வுகள் இருக்கின்றன.அப்படி கடந்த வருடம் வெளியான ‘இறுகப்பற்று’ படத்தின் மூலம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்துகிறார் நடிகர் விதார்த். தற்போது ஜூன்-7ஆம் தேதி வெளியாகவுள்ள ‘அஞ்சாமை’ படத்திலும் நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.அறிமுக இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன் இயக்கியுள்ள இந்தப்படத்தை திருச்சித்ரம் சார்பில் டாக்...
”கதை உறுதியானதாக இருக்கும் போது நடிப்புத்திறன் சிறப்பாக வெளிப்படும்” – ராஜீவ்மேனன்

”கதை உறுதியானதாக இருக்கும் போது நடிப்புத்திறன் சிறப்பாக வெளிப்படும்” – ராஜீவ்மேனன்

சினிமா, திரைச் செய்தி
ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜீவ் மேனன் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தில் தனது திறமையான நடிப்பிற்கு பலரது பாராட்டுகளையும் பெற்றார். இப்போது ‘வெப்பன்’ திரைப்படத்தில் இன்னுமொரு அசரடிக்கும் நடிப்பைக் கொடுத்துள்ளார். சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படம் அறிவியல் புனைக்கதை ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. குகன் சென்னியப்பன் இயக்கி இருக்கும் இந்தப் படம் ஜூன் 7, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.“இயக்குநர் குகன் இந்தக் கதையை என்னிடம் சொன்னபோது கதையின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, தெளிவு மற்றும் சரியான நோக்கம் இதையெல்லாம் என்னால் உணர முடிந்தது. இந்தக் கதையில் ஒரு வலுவான கதாபாத்திரத்திற்காக அவர் என்னை அணுகியது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில், இந்த கதாபாத்திரத்தை பல முன்னணி நடிகர்கள் ந...
’”வெப்பன்” படத்தை பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன் – வசந்த் ரவி

’”வெப்பன்” படத்தை பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன் – வசந்த் ரவி

சினிமா, திரைச் செய்தி
நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து, தனது இயல்பான நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் நடிகர் வசந்த் ரவி. குகன் சென்னியப்பன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ‘வெப்பன்’ திரைப்படம் ஜூன் 7, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.படம் குறித்து நடிகர் வசந்த் ரவி கூறும்போது, ”’வெப்பன்’ திரைப்படத்தின் விஷுவல் புரோமோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அபரிதமான வரவேற்பு எங்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. படத்தையும் பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று முழுமையாக நம்புகிறோம். எமோஷன்ஸ், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றின் கலவையாக படம் தொடங்கியதில் இருந்து இறுதி வரை பார்வையாளர்களை நிச்சயம் இந்தப் படம் மகிழ்விக்கும். ஒரு நடிகராக நான் எப்போதும் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து எனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ...
அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் ’வெப்பன்’ திரைப்படம் பிடித்தமானதாக இருக்கும்.

அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் ’வெப்பன்’ திரைப்படம் பிடித்தமானதாக இருக்கும்.

சினிமா, திரைச் செய்தி
’வெப்பன்’ திரைப்படத்தின் அசரடிக்கும் விஷூவல் மற்றும் டிரைய்லர் காட்சிகள் திரையுலகினர் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஹ்யூமன்’ எலிமென்ட்டை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் புனைக்கதை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 7, 2024 அன்று வெளியாகிறது. இதில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.நடிகர் சத்யராஜ் பேசுகையில், “படம் உருவாக்குவதில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் நோக்கமும் ஒன்றாக இருந்தால் படத்தின் வெற்றி என்பது தவிர்க்க முடியாததாகிவிடும். ’வெப்பன்’ படத்தில் நான் கற்றுக் கொண்டது இதுதான். படக்குழுவினர் அனைவரும் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த சூழல் எனக்கு நேர்மறையாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை, திரைப்படத் துறையின் தரத்தை உயர்த்த விரும்பும் தயாரிப்பாளர்கள் கிடைப்பது தமிழ் சினிமாவிற்கு...