32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

The India Story: பூச்சிக்கொல்லி இரசாயனங்களின் பேராபத்து

Dinesh R சேலம் Published: 07/06/2026 2 நிமிட வாசிப்பு Updated: 08/06/2026 அயல் சினிமா
எழுத்து அளவு:

ஒரு தீவிரமான சமூக, தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை சேட்டன் DK இயக்க, சாகர் B. ஷிண்டே எழுதித் தயாரித்துள்ளார். இந்தப் படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘தி இந்தியா ஸ்டோரி (The India Story) அல்லது The India Story: Slow Poison in Progress என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், விவசாயத்தில் குறிப்பாகப் பூச்சிக்கொல்லி இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவையென்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.

இப்படம் உருவானதற்கான காரணத்தைப் பற்றி தயாரிப்பாளர் சாகர் B. ஷிண்டே, “நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்தப் படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

இயக்குநர் சேட்டன் DK, “இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையைக் கொடுக்கக் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும் ஷ்ரேயாஸ் இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது” என்றார்.

இன்றைய பார்வையாளர்கள் சிறந்த கருத்துக்களை மையப்படுத்திய திரைப்படங்களை அதிகம் விரும்பும் சூழலில், ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு பொருத்தமான மற்றும் சிறப்பான திரை வெளியீடாக அமையும். சமூக பொறுப்புணர்வைத் தூண்டும் இந்தப் படம், சினிமாவைத் தாண்டி முக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி வினாயக் சைன்டானே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பக்வத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, எடிட்டர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி மற்றும் ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோரின் பங்களிப்பும் இப்படத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

இப்படத்தை உலகமெங்கும் ஜீ ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.