Shadow

BJP – ஜஸ்வந்த் சிங் நீக்கமும் அதன் பின்பக்கமும்

சிம்லாவில் நடைபெற்றுவரும் ”சைதன் பைதக்” எனும் செயற்குழு அவசர அவசரமாக 30 வருடங்களாக BJP யில் உழைத்த ” ஜஸ்வந்த் சிங் ” நீக்கப்பட்டதாக அறிவித்தது. ஜஸ்வந்த் சிங் உடனே தான் அனுமனாக BJP யில் இருந்ததாகவும் தற்பொழுது ராவணனாக  என்னை மாற்றி உள்ளனர் என்றும் சொல்கிறார்.

அவருக்கு விளக்கமளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. TV மீடியாக்கள் தொடர் செய்தியாக இதை ஒளிபரப்பி வருகின்றன. ஜஸ்வந்த் சிங் செய்த பிழை தான் என்ன? ஒரு புத்தகம் எழுதினர் என்பது தான் குற்றச்சாட்டு. பாகிஸ்தான் தேசத்தை, பாகிஸ்தான் தனிநாடு தோன்றுவதற்கு காரணமான ஜின்னா புகழதக்கவரா? அதுவும்  BJP எனும் இந்துமத கொள்கையுடைய கட்சியை சார்ந்தவர் புகழ்வதா? இது எப்படி நிகழ்ந்தது ஜஸ்வந்த் சிங் மட்டும் ஏதோ வாய்தவறி (கைதவறி) புகழ்ந்துவிட்டார் என்று சொல்லமுடியாது. 2005 -ம் ஆண்டு L.K. அத்வானி பாகிஸ்தான் சென்ற போது ஜின்னாவை புகழ்ந்தார் உடனடியாக அவரின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் கட்சியிலிருந்து அவரை நீக்கவில்லை. தற்பொழுது  ஜஸ்வந்த் சிங்கிற்கு நடப்பது என்ன? ஏன் BJP யினர் அதுவும் தலைவர்கள் ஜின்னாவை புகழ்கின்றனர்? இதன் பின்னணியில் ஒரு உளவியல்  ரீதியான காரணம் மறைந்துள்ளது அதை விளக்குவதுதான் என் நோக்கம்.

BJP -யின் வேர் RSS இதன் கொள்கை ”இந்துத்துவா” அதாவது இந்துமதம் அனைவராலும்  ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இந்தியா – இந்துநாடாக இருக்கவேண்டும். சிறுபான்மையினர் இந்துமதத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். குறிப்பாக முஸ்லீம்கள் நமது அரசியல் சாசன முகப்புரை preamble -ல் secular : மதச்சார்பற்ற என்ற வார்த்தை வலியுறுத்தப்பட்டுள்ளது. அடிப்படை உரிமை 19 மத சுதந்திரத்தை – வலியுறுத்துகிறது. பல மதத்தை – மொழியை கலாச்சாரத்தை உள்ளடக்கிய நமது நாட்டிற்கு ”மதச்சார்பின்மை” எனும் அரசுமுறைதான் சிறந்தது. ஆனால் BJP – மதச்சார்பின்மை என்றாலே ”போலி மதச்சார்பு” என்று திட்டுகிறது. இந்தியா என்பதே இந்துநாடு என்கிறது இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.ஆனாலும் மத உணர்வை தூண்டி பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டை பெறுவதற்காக BJP இக்கொள்கையை பின்பற்றி வருகிறது. ஆனாலும் நடுநிலையானவர்களின் ஆதரவை பெற அதற்கு திரு.வாஜ்பேயி எனும் மிதவாத முகமூடி தேவைப்படுகிறது. சில முஸ்லீம்களுக்கு MP சீட், திரு.அப்துல்கலாமை குடியரசு தலைவராக ஆதரித்தது என்ற சில முகமூடிகள் தேவைப்படுகின்றன.

சரி நம் ஜஸ்வந்த் சிங் விவகாரத்திற்கு வருவோம். ஜின்னா- முஸ்லீம்களுக்கு தனிநாடு பெறுவதில் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால் BJP -யினரால் அது முடியவில்லை எனவே  ஜின்னா அவர்களுக்கு – ஆதர்ச புருஷனாக தெரிகிறார். ஜின்னா செய்தது சரி என்று சொன்னால்தான்  தான் செய்வதும் சரி என்று விளக்க முடியும். எனவே ஜின்னா புகழப்படுகிறார். நேரு வெறுக்கப்படுகிறார் அவர் மதச்சார்பற்றவர். மதச்சார்பு என்று பேசுபவர்களை வெறுப்பதுதான் BJP யின் நிலை, எனவே நேரு வெறுக்கபடுகிறார். மதச்சார்புவாதியான ஜின்னா புகழப்படுகிறார். இது உள்மன விளைவு ஆனால் இதை வெளிப்படையாக புகழ்ந்தால் முஸ்லீம்களை எப்படி புகழலாம் என்று கேள்வி வருவதால் அவரை கட்சியிலிருந்து  நீக்கியுள்ளார்கள்.

எது எப்படியோ? இவர்கள் ஒன்றைமட்டும் புரிந்து கொள்ள வேண்டும். நாடும் தான். ஜின்னா – முஸ்லீம்களுக்கு தனி நாடு கேட்டவர். இன்று நாடு பின்னுக்குத் தள்ளப்பட்டு மதம் முன்னே வந்துவிட்டது. அதுதான் இன்றைய பாகிஸ்தான் பிரச்சனை. பிரச்சனை பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல. இந்த பிராந்தியத்திற்கேதான். (உ-ம்) தாலிபான்கள்.

இந்தியா – இந்துக்களுக்கு என்று சொல்பவர்கள் இந்தியா எனும் நாடுபோய் இந்து எனும் மதம் முன்னே நிற்கும். பின்பு மனுதர்மம்தான் ஆட்சி செய்யும். மனிதம் மறையும். இது தான் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது. 

– சாமானியன்    

Leave a Reply