SMCA | சென்னையில் பிரம்மாண்ட துர்கா பூஜை கொண்டாட்டம்
மேற்கு வங்காளத்தைப் பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வசிப்பவர்கள் மிகப் பிரம்மாண்டமான முறையில் துர்கா பூஜையைக் கொண்டாடுகின்றனர்.The Secret of religion lies not in theories but in practice; To be good and do good – that is the whole of religion.- Swami Vivekananda
"சுவாமி விவேகானந்தரின் மேற்கோள்களை உண்மையாகவே உள்வாங்கி, இடையிடையே நடக்கும் பண்டிகைகளைத் தவிர, பொது அறக்கட்டளையாகப் பதிவுசெய்யப்பட்ட SMCA (South Madras Cultural Association) சாரிட்டபிள் டிரஸ்டுடன் ஆண்டு முழுவதும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறோம். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அன்னதானம், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவைச் சிறப்பாக வழங்கி வழங்குகிறோம். சமூகத்தின் விளிம்புநிலை மற்றும் தேவைப்படும் மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதில் SMCA எப...