Shadow

திரைச் செய்தி

“டங்கி” படத்தை தமிழ்நாடு மற்றும் கேரளாவில்  வெளியிடும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம்

“டங்கி” படத்தை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடும் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம்

சினிமா, திரைச் செய்தி
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்திற்கான, விநியோகம் செய்யும் உரிமையை பெற்றுள்ளது !!'ஜவான்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்தினுடைய கேரளா மற்றும் தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளது, ஸ்ரீ கோகுலம் மூவிஸ். இதில் ஷாருக்கான் அனைவரையும் மயக்கும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாராகி, இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி எழுதி, இயக்கி, எடிட்டிங் செய்திருக்கும் இப்படம் டிசம்பர் 21 முதல், திரையரங்குகளில் வெளியாகிறது.ட்ரீம் பிக் பிலிம்ஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் 'டங்கி' படத்தின் விநியோக பங்குதாரராக இணைந்துள்ளது. கிங் கான் ஷாருக்குடன் மீண்டுமொரு படத்தில் நாங்கள் இணைவதில் பெரும...
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டங்கி படத்திற்காக சிறப்பு பாடலொன்றை படமாக்கியுள்ளார் ஷாருக்கான் !!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டங்கி படத்திற்காக சிறப்பு பாடலொன்றை படமாக்கியுள்ளார் ஷாருக்கான் !!

சினிமா, திரைச் செய்தி
சமீபத்தில் வெளியான டங்கி டிராப் 4 படத்தின் மீதான எதிர்பார்ப்பை, உச்சகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. ரசிகர்கள் ஒரு அற்புதமான திரை அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி உணர்ச்சிகள் நிறைந்த, ஒரு மகத்தான மனதைக் கவரும் உலகத்தை வடிவமைத்திருக்கும் விதத்தைப் பார்வையாளர்கள் பாராட்டினாலும், படத்தின் மையத்தை அழகாக வெளிப்படுத்தும் பாடல்களையும் அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இதுவரை வெளியான பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்போது அவர்களின் உற்சாகத்தை மேலும் உயர்த்தும் வகையில் மேலும் ஒரு அப்டேட் வந்துள்ளது. விளம்பர நோக்கங்களுக்காக கவனமாக வடிவமைக்கப்பட்ட “டங்கி” படத்திற்கென ஒரு சிறப்புப் பாடலைப் படமாக்க SRK ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தந்த தகவலின் படி , "ஷாரூக் மற்றும் ஹிரானி ...
“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

சினிமா, திரைச் செய்தி
ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை.பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாக...
ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

சினிமா, திரைச் செய்தி
KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இவ்விழாவினில்..திண்டுக்கல் I லியோனி பேசியதாவது.., முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர். நிறைய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். முனீ...
ஹாலிவுட் விருதுகளில் இடம்பிடித்த அட்லியின் ஜவான்

ஹாலிவுட் விருதுகளில் இடம்பிடித்த அட்லியின் ஜவான்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இடம்பிடித்த தமிழ் இயக்குநராக சாதனை படைத்துள்ளார் இயக்குநர் அட்லி.தமிழ்த் திரையுலகில் கமர்ஷியல் படங்களுக்கு புது வடிவம் தந்தவர், முன்னணி நட்சத்திரங்களை ப்ளாக்பஸ்டர் ஹீரோக்களாக மாற்றியவர் இயக்குநர் அட்லி. தமிழ் சினிமா வசூலில் வரலாற்றுச் சாதனைப் படைத்து, பின் பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான, “ஜவான்” மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் இயக்குநர் அட்லி. ராஜா ராணி ப்ளாக்பஸ்டர் வெற்றி மூலம் திரையுலக பயணத்தை துவங்கிய அட்லி, தெறி, மெர்சல், பிகில் படங்கள் மூலம் உச்சம் தொட்டு...
ராக்கிங் ஸ்டார் யாஷின் அடுத்த பட டைட்டில் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” !!

ராக்கிங் ஸ்டார் யாஷின் அடுத்த பட டைட்டில் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” !!

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
ஒன்றரை வருடங்களாக அமைதி காத்த ராக்கிங் ஸ்டார் யாஷ் தனது அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார். டாக்ஸிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் என்று அறிவித்துள்ளார். இந்திய சினிமாவில் மிகவும்  எதிர்பார்க்கப்படும் இப்படம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் நாடு முழுக்க ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ராக்கிங் ஸ்டார் யாஷ் கூட்டணியில் உருவாகிறது.தாங்கள் செய்ய விரும்பிய படத்தை ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக உருவாக்கும் முனைப்பில் பொறுமை மற்றும் ஆர்வத்துடன், இருவரும் படத்தை வடிவமைப்பதிலும் ஒரு நட்சத்திரக் குழுவை அமைப்பதிலும் தங்கள் முழுமையான நேரத்தை எடுத்துக் கொண்டனர். பல ஊகங்களுக்குப் பிறகு, படக்குழு படத்தின் தலைப்பை ஒரு காட்சி துணுக்குடன் பகிர்ந்து கொண்டது, அது அவர்களின் திட்டமிடலையும்  படைப்பின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பையும் எடுத்துக் க...
அவள் பெயர் ரஜினி விமர்சனம்

அவள் பெயர் ரஜினி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
படத்தின் ஆரம்பத்தில் மர்மமான முறையில் நடக்கும் ஒரு மரணம். அந்த மரணத்தின் பின் இருக்கும் மர்மங்களை அவிழ்க்க, நாயகனின் போராட்டம், இவையே “அவள் பெயர் ரஜினி” திரைப்படத்தின் ஒற்றை வரிக்கதை.படத்தின் துவக்கத்தில் காரில் ஹைவேஸில் பயணம் செய்து கொண்டிருக்கும்  ஒரு கணவன் மனைவி காட்டப்படுகிறார்கள். கார் ஓட்டிக் கொண்டு வரும் கணவனுடன் நாயகன் காளிதாஸ் வீடியோ காலில் மாம என்று அழைத்தபடி பேசிக் கொண்டு வருகிறான். அவன் பேசி முடிக்கும் தறுவாயில் கார் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிடுகிறது. பின்னால் தூங்கிக் கொண்டு இருக்கும் மனைவியை எழுப்பி தான் போய் பக்கத்தில் இருக்கும் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பி வருகிறேன் என்று கேனை எடுத்துக் கொண்டு செல்கிறான்.  அவன் திரும்பி வருவதற்குள் அந்த விபரீதம் நடந்தேறுகிறது. அந்த கொலையை நிகழ்த்தியது ஒரு மனித உயிரா..? இல்லை அமானுஷ்ய சக்தியா..? என்பதான குழப்பம் கொலையை நேரிடையாகப்...
”24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகள்” – சாதனை படைத்த டங்கி டிராப் 4 டிரெய்லர்

”24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகள்” – சாதனை படைத்த டங்கி டிராப் 4 டிரெய்லர்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
இந்த ஆண்டின் இறுதிக்கட்டத்தை டங்கி திரைப்படத்தின் மனம் வருடும் பயணத்துடன் முடிப்பதற்காக, ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.ஜவான் வெற்றியைத் தொடர்ந்து SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார்!  டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த டிரெய்லர் மனதின் உணர்ச்சிகளைத் தூண்டி, ராஜ்குமார் ஹிரானியின் படைப்பாக்கத்தின் திரை அழகை எடுத்துக்காட்டுகிறது. பொம்மன் இரானி, டாப்ஸி பாணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர், மற்றும் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த, இன்னும் பல திறமையான நடிகர்களால் சித்தரிக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன், பார்வையாளர்களை ஒரு ரோலர்-கோஸ்டர் சவாரிக்கு இந்த வீடியோ  அழைத்துச் செல்கிறது.ஷாருக்கின் வசீகரத்துடன் ராஜ்குமார் ஹிரானியின் மனதைக் கவரும் தருணங்களுடன் மாயாஜாலத்தை நிகழ்த்தும் டங்கி டிரெய்லர் 24 மணி நேரத்திற்...
“விஜய் குமார் என்றால் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும்” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

“விஜய் குமார் என்றால் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும்” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவருகிறது “ஃபைட் கிளப்” திரைப்படம். ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், இயக்குநரும் நடிகருமான விஜய் குமார் கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாகத் தயாரிப்பாளர் ஆதித்யா, “ஃபைட் கிளப், மிகப் பெரிய அனுபவம். முதலில் லோகேஷ் பிரதருக்கு நன்றி. இந்தப் படம் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. ரீல் குட்ஸ் ஃபிலிம்ஸ் ஆரம்பித்ததிலிருந்தே விஜய் குமாரும் நானும் படம் செய்யப் பேசி வந்தோம். இப்போது இந்தக் கட்டத்திற்குப் படம் வந்துள்ளது மகிழ்ச்சி. இந்தப் படம் கடந்த ஆண்டு பாதி முடித்திருந்தபோது விஜய்குமார் லோகேஷ் பிரதருக்கு படம் காட்ட வேண்டும் என்றார். அப்போது விக்ரம் சக்சஸில் இருந்தார்...
“சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் மானியம் வழங்கவேண்டும்” – எஸ்.வி.சேகர் | எமகாதகன்

“சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் மானியம் வழங்கவேண்டும்” – எஸ்.வி.சேகர் | எமகாதகன்

சினிமா, திரைச் செய்தி
சிங்கப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமணி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷன்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'எமகாதகன்' ஆகும். பிரைம் ரீல்ஸ் நிறுவனம் வழங்கும் இந்தப் படத்தில் கதாநாயகர்களாக கார்த்திக் மற்றும் மனோஜ் நடிக்க ரஷ்மிகா திவாரி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வட்டகரா’ சதீஷ் வில்லனாக நடிக்க அனுஷ்கா மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எமகாதகன் படக்குழுவினருடன், சிறப்பு விருந்தினர்களாக நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் திருமலை, நடிகர் சௌந்தர்ராஜன் மற்றும் இயக்குநர் சரவணசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடிகர் எஸ்.வி.சேகர், “வெற்றிகரமான மனிதர்களை எமகாதகன் என சொல்வது உண்டு. அந்த வகையில் இந்தப் படத்தின் டைட்டில் நெகட்டிவ் ஆக இல்லாமல், அதே சமயம் அனைவரும் புழங்கக...
“நானும் ரன்பீரும் விலங்குகள் போல் சண்டையிடுவோம்” – பாபி தியோல்

“நானும் ரன்பீரும் விலங்குகள் போல் சண்டையிடுவோம்” – பாபி தியோல்

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் “அனிமல்” திரைப்படம், டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னைக்கும் வருகை தந்திருந்தனர். தயாரிப்பாளர் பூஷன் குமார், “இது சந்தீப் வங்காவின் படம். அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து பணியாற்றினோம். அவர் எங்களிடம் அனிமல் கதையைச் சொன்ன போது, மிக வித்தியாசமானதாகப் புதுமையானதாக இருந்தது. அவரது திரை உருவாக்கம் பற்றித் தெரியும் என்பதால் உடனடியாக இப்படத்தை ஆரம்பித்தோம். இப்படத்திற்காக ரன்பீர், ராஷ்மிகா, பாபி என எல்லோரும் கடுமைய...
“மூன்று நாயகிகளுடன் நடித்திருப்பதை கீர்த்தி தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்” – அசோக்செல்வன்

“மூன்று நாயகிகளுடன் நடித்திருப்பதை கீர்த்தி தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்” – அசோக்செல்வன்

சினிமா, திரைச் செய்தி
அறிமுக இயக்குநர் சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன் ஆகும். நாயகிகளாக மேகா ஆகாஷும், கார்த்திகா முரளிதரனும், சாந்தினி செளத்ரியும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூட்யூப் சேனலான நக்கலைட்ஸின் அருண், எருமைசாணி சேனல் புகழ் ஜெய்சீலன், Certified Rascals ஸ்ரீராம், போன்றோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து மயில்சாமி, துளசி, மைக்கேல் தங்கதுரை, ஸெர்லின் சேத், விவியா சந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் செல்வனின் ’ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமனும், பிரபு ராகவும் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். Clear water பிக்சர்ஸ் சார்பாக அரவிந்த் ஜெயபாலன், i Cinem...
“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங்

“எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ இருக்கு” – ஹரிஷ் கல்யாண் | பார்க்கிங்

சினிமா, திரைச் செய்தி
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஸ்ரீனீஸ், “நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் செலவுகளைக் கவனித்து வந்த என் பள்ளி நண்பர்களுக்கு நன்றி. என் ஸ்கூல்மேட் தான் இயக்குநர் நெல்சன். அவரை டார்ச்சர் செய்துதான் அவரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அவருக்கு நன்றி. நான் தனியாக படம் எடுக்க வேண்டும் என நினைத்தபோது உதவிய அருண் பாலாஜி, நந்தகுமார் இரண்டு பேருக்கும் நன்றி. நான் செய்த ‘பலூன்’ திரைப்படம் எனக்கு திருப்தியாக இல்லை. அந்த சமயத்தில் விஜய்சேதுபதி, திலீப் சுப்பராயன் என்னைத் தயார...
சூரகன் – பெண்ணைக் காப்பாற்றி பிரச்சனையில் சிக்குபவன்

சூரகன் – பெண்ணைக் காப்பாற்றி பிரச்சனையில் சிக்குபவன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
3rd Eye Cine Creations சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”. டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. வழக்குரைஞரும் தயாரிப்பாளரும் நாயகனுமான கார்த்திகேயன், “சூரகன் ட்ரெய்லரை இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை மீடியா நண்பர்கள் முன் அறிமுகப்படுத்துவது எங்களுக்குப் பெருமை. இந்தப் படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தனர். அசோகன் சார் சொன்னது போல் மனதளவிலும் நாங்கள் அனைவருமே விஜயகாந்த் சார் போல் தான் கடினமாக உழைத்தோம். இந்தப் படத்தில் எல்லோருமே அவர்கள் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். டேஞ்சர் மணி சார் எல்லாம், என...
இரட்டை இயக்குநர்களின் ‘லாக்கர்’ திரைப்படம்

இரட்டை இயக்குநர்களின் ‘லாக்கர்’ திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
லாக்கர் என்றொரு படத்தை, இரட்டை இயக்குநர்களான ராஜசேகரும், யுவராஜ் கண்ணனும் இணைந்து இயக்கியுள்ளார்கள். இவர்கள் இருவருமே சினிமாவின் மீது தீராத காதல் கொண்டவர்கள். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே இறுதிப்பக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். எதற்கும் துணிந்தவன், கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும், மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்பவர். கள்ளச்சிரிப்பு என்ற ஜீ5-இன் இணைய தொடரிலும் நடித்துள்ளார். கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். இவர் சில பைலட் படங்களிலும் ஆல்பங்களிலும் நடித்துள்ளவர். வில்லனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார். இவர் தரமணி, ரெஜினா போன்ற படங்களில் நடித்தவர். பிரின்ஸ், மிரள், குட் நைட் போன்ற படங்களில் நடித்த சுப்ரமணியன் மாதவன் முக்கிய கதாப்ப...