Shadow

திரைச் செய்தி

”சிஸ்டர்” ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம்

”சிஸ்டர்” ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம்

சினிமா, திரைச் செய்தி
Dwarka Productions பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர், காமெடிப்படத்திற்கு “சிஸ்டர்” எனப்பெயரிடப்பட்டுள்ளது.திரைப்பிரபலங்கள் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார், இயக்குநர் அருண் ராஜா காமராஜ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் இப்படத்தின் மோஷன் போஸ்டரை சமூக வலைதளம் வழியே இன்று வெளியிட்டனர்.https://youtu.be/Xj5obQcNlR0கடந்த மாதம் துவங்கி, தீவிரமாகப் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது,அறிமுக இயக்குநர் ரா.சவரி முத்து, வித்தியாசமான களத்தில...
”மிஷன் சாப்டர் 1ல் ஆக்‌ஷன் காட்சிகள் வலிய திணிக்கப்பட்டவை அல்ல” – அருண் விஜய்

”மிஷன் சாப்டர் 1ல் ஆக்‌ஷன் காட்சிகள் வலிய திணிக்கப்பட்டவை அல்ல” – அருண் விஜய்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
ஆக்‌ஷன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு நடிகர் அருண் விஜய் எப்போதும் பிடித்தமானவர். ஏனெனில், அவர் தனது படங்களில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரக்கூடியவர். அவரது வரவிருக்கும் திரைப்படமான ‘மிஷன் சாப்டர் 1 (அச்சம் என்பது இல்லையே)' டிரெய்லர் அவரது ஆக்‌ஷன் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் விஜய் இயக்கிய இந்தப் படம் ஜனவரி 12, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.நடிகர் அருண் விஜய் படம் குறித்து கூறும்போது, ​​“எனது முந்தைய படங்களில் நான் செய்த ஆக்‌ஷன்களை விட இந்தப் படத்தில் ஆக்‌ஷன் இன்னும் அதிகமாக, சிறப்பாக இருக்கும். 'மிஷன் சாப்டர் 1' படத்தில் பல எமோஷன் உள்ளது. பல திருப்பங்களோடு பர்வையாளர்களுக்குப் பிடித்த வகையிலான திரையங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுத்து உற்சாகப்படுத்தும். இந்தப் படத்தில் பெயருக்காக நாங்கள் எ...
நேர்வழியில் விரைவில் பெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதை சொல்லும் ரமேஷ் அரவிந்தின் புத்தகம்

நேர்வழியில் விரைவில் பெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதை சொல்லும் ரமேஷ் அரவிந்தின் புத்தகம்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
என்பதற்கான எளிய வழிகளை புத்தகம் மூலம் இளைஞர்களுக்கு சொல்லும் நடிகர் ரமேஷ் அரவிந்த்'அன்புடன் ரமேஷ்' புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் பரபரப்பாக விற்பனை ஆகிறது, அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டிலும் கிடைக்கும்தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவரும் திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவருமான ரமேஷ் அரவிந்த் ஒரு ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளரும் கூட.கர்நாடகா முழுவதும் உள்ள பெருநிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டும் பேச்சுக்கள், பயிற்சிகளை வழங்கி வரும் ரமேஷ் அரவிந்த், கல்வி, வாழ்க்கை, பணி, மற்றும் தொழிலில் வெற்றி பெறுவது குறித்த புத்தகங்களையும் எழுதி வருகிறார்.இந்த வரிசையில் இவர் எழுதியுள்ள 'அன்புடன் ரமேஷ்' என்ற...
காஸ்மோரா இயக்குநருடன் கைகோர்க்கும் விஷ்ணு விஷால்

காஸ்மோரா இயக்குநருடன் கைகோர்க்கும் விஷ்ணு விஷால்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
2022 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான கட்டா குஸ்தி படத்திற்குப் பிறகு, எங்களின் அடுத்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்த புதிய திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார் மற்றும் ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற வெற்றிப்படங்களையும் மற்றும் விரைவில் வரவிருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தையும் இயக்கியுள்ள இயக்குநர் கோகுல் இப்படத்தை இயக்கவுள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்காலிகமாக ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் - புரடக்சன் நம்பர் எண் 10’ என்று அழைக்கப்படும்.விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் வெளிவந்த ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், கட்டா குஸ்தி , எஃப் ஐ ஆர் போன்ற வெற்றிப் படங்களின் தொடர்ச்சியாக அடுத்து வரவுள்ள “ஆர்யன்” படமும் அதிக பொருட்செலவில், ஆக்சன் மற்றும் அசத்தலான பொழுது போக்குத் திரைப்பபடமாக உருவ...
நெட் ப்ளிக்ஸில் அபிஷேக் செளபே-வின் “கில்லர் சூப்”

நெட் ப்ளிக்ஸில் அபிஷேக் செளபே-வின் “கில்லர் சூப்”

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
நெட்ஃபிளிக்ஸ் உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு சேவையாகும், 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 247 மில்லியன் கட்டண உறுப்பினர்களுடன் டிவி தொடர்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் என்று உலகளவில் மக்களின் வரவேற்பு பெற்று தரமான தொகுப்புகளை வழங்கும் நெட்ஃப்ளிக்ஸில் இப்பொழுது கில்லெர் சூப் , 2024 ஆம் ஆண்டிற்கான அட்டவணையில் இணைந்துள்ளது.ரே, சொஞ்சிரியா போன்ற இந்தி திரைப்படங்களை இயக்கிய அபிஷேக் சௌபே தற்போது, "கில்லர் சூப்" என்ற இணைய தொடர் இயக்கி இருக்கிறார். இத்தொடர், மைஞ்சூர் என்ற கற்பனை நகரத்தில் நிகழும் இக்கதையில் பல காதல் சாரம்சங்களை உள்ளடக்கி விறுவிறுப்பான திருப்புமுனைகளைக் கொண்டது.சேட்டனா கௌஷிக் மற்றும் ஹனி ட்ரெஹான் தயாரித்துள்ளனர். வரும் ஜனவரி 11ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் - இல் வெளியாகிறது. இதில் மனோஜ் பாஜ்பாய், கொங்கோனா சென்ஷர்மா, நாசர், சாயாஜி ஷிண்டே, லால், அன்புதாசன், அனுலா நவ்லேகர் மற்...
”மிஷன் – சாப்டர்- 1 என்னை வேறுமாதிரி இப்படத்தில் பார்ப்பீர்கள்” – அருண் விஜய்

”மிஷன் – சாப்டர்- 1 என்னை வேறுமாதிரி இப்படத்தில் பார்ப்பீர்கள்” – அருண் விஜய்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன் சாப்டர்1' ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.எடிட்டர் ஆண்டனி பேசியதாவது, "படம் சூப்பராக வந்திருக்கிறது. அருண் விஜய் சாரும் சூப்பராக செய்திருக்கிறார். இண்டர்நேஷனல் தரத்தில் படம் வந்திருக்கிறது".நடிகர் ருத்ரன், "தமிழில் இது என்னுடைய முதல் படம். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. அருண் விஜய், ஏமி ஜாக்சன் இருவரும் ஆக்‌ஷனில் பின்னியுள்ளார்கள். ஆதரவு கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி".நடிகர் விராஜ், "இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய் சாருக்கு நன்றி. படத்தில் வேலைப் பார்த்த நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினருக்கு நன்றி".நடிகர் பரத் கோபன்னா பேசியதாவது, "இந்தப் படம் வெளியாகும் நாளுக்காகதான் இத்...
சர்வதேச தரத்துடன் ஜூனியர் என்.டி.ஆரின் “தேவரா” கிளிம்ப்ஸ்

சர்வதேச தரத்துடன் ஜூனியர் என்.டி.ஆரின் “தேவரா” கிளிம்ப்ஸ்

திரைச் செய்தி, திரைத் துளி
மாஸ் ஹீரோ என்டிஆர் நடிப்பில், கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேவரா’ படத்தின் முதல் பாகத்தின் கிளிம்ப்ஸ் சர்வதேச தரத்துடன் வெளியாகியுள்ளது!மாஸான புதிய அவதாரத்தில் நடிகர் என்டிஆர் மிரட்ட உள்ள ஆக்‌ஷன் டிராமா திரைப்படம் ‘தேவரா’. இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். சயிஃப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இயக்குநர் கொரட்டாலா சிவா திட்டமிட்டுள்ளார். இதன் முதல் பாகமான, ‘தேவரா பார்ட்1’ உலகெங்கிலும் ஏப்ரல் 5, 2024 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.இந்தப் படத்தினை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். ‘தேவரா’வின் உலகை அறிமுகப்படுத்தும் வகையிலான கிளிம்ப்ஸ் இன்று வெளியா...
தமிழகத்தின் மிகப்பெரிய திரையரங்கமான கோவை “பிராட்வே”

தமிழகத்தின் மிகப்பெரிய திரையரங்கமான கோவை “பிராட்வே”

திரைச் செய்தி, திரைத் துளி
தமிழகத்திலேயே மிகப்பெரிய மிக நவீன வசதிகளுடன் கூடிய, திரையரங்கமாக பிராட்வே திரையரங்கம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. இத்திரையரங்கத்தினை பார்வையிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் இனைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி, திரையரங்கு உரிமையாளர் திரு சதீஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன திரையரங்கமாக, பிராட்வே திரையரங்கம் அமைந்துள்ளது. 9 திரைகள் கொண்ட இந்த திரையரங்கில், தமிழகத்திலேயே மிகப்பெரிய திரை அளவைக்கொண்ட, லேசர் ஸ்கிரீன் எபிக், ஐமேக்ஸ் ஸ்கிரீன் மற்றும் மிகச்சிறந்த ஒலி அமைப்பும் புதுமையான வகையில் உயர்தரத்திலான இருக்கை வசதிகளுடன் கூடிய கோல்ட் ஸ்கிரீன் அமைந்துள்ளது. இதனுடன் 6 வழக்கமான திரைகளும் அமைந்துள்ளது.ரசிகர்களும், திரைக்காதலர்களும் வியந்து பார்க்கும் வகையிலான, இந்த மல்டிப்ளெக்ஸ் பிராட்வே திரையரங்கினை பார்...
சிம்புவுடன் நடிக்க வேண்டும் என்கின்ற தீராத ஆசை – நடிகை தேவயானி ஷர்மா

சிம்புவுடன் நடிக்க வேண்டும் என்கின்ற தீராத ஆசை – நடிகை தேவயானி ஷர்மா

திரைச் செய்தி, திரைத் துளி
டெல்லியை பூர்விகமாக கொண்ட நடிகை தேவயானி ஷர்மா, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகங்களில் வலம் வருகிறார். 2021 ஆம் ஆண்டு , ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பலவிதமான நாட்டிய கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவர் கூறுகையில், " ஹிந்தி , தெலுங்கு என்ற மொழிகளில் நான் படங்கள் செய்திருந்தாலும்  எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது.சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் செயல்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும். கீர்த்தி சுரேஷ் சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம். வாழ்வில் என்னுடைய லட்சியம் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே ஆகும். இதற்காக முழு வீச்சில் இறங்கி உள்ளேன், அதற்கான வேலையையும் தொடங்கி விட்டேன். ...
“கேம் என்றாலே பிரச்சினைதான்” ; இமெயில் பட நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் பேச்சு

“கேம் என்றாலே பிரச்சினைதான்” ; இமெயில் பட நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் பேச்சு

இது புதிது, சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர்கள் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார், கோமல் சர்மா, ரத்னா, லொள்ளு சபா மனோகர், சிதம்பரம், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, முத்துக்குமார், இந்திய தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் நிறுவனருமான சாலமன், சமூக சொற்பொழிவாளர் முகிலன், தொழிலதிபர்கள் எஸ்.ஆர் ப...
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கத்ரீனா கைஃப் ஜோடியாக நான் நடித்திருக்கிறேன் என்பதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை – விஜய் சேதுபதி

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கத்ரீனா கைஃப் ஜோடியாக நான் நடித்திருக்கிறேன் என்பதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை – விஜய் சேதுபதி

சினிமா, திரைச் செய்தி
பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மெரி கிறிஸ்மஸ்'. இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது.இதை முன்னிட்டு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், பட...
ராம் சரண் – புச்சி பாபு சனா படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்

ராம் சரண் – புச்சி பாபு சனா படத்தில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்

திரைச் செய்தி, திரைத் துளி
குளோபல் ஸ்டார்' ராம்சரண் - இயக்குநர் புச்சி பாபு சனா - தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு- விருத்தி சினிமாஸ்- மைத்திரி மூவி மேக்கர்ஸ் - சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் 'ஆஸ்கார் நாயகன்' ஏ. ஆர். ரஹ்மான் இணைந்திருக்கிறார்.'குளோபல் ஸ்டார்' ராம்சரண்- அடுத்ததாக இளம் மற்றும் திறமையான இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் இணைகிறார். இயக்குநர் புச்சி பாபு சனா - தனது முதல் படைப்பாளியான 'உப்பென்னா' எனும் திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார். இந்தத் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இவர்களின் கூட்டணியில் உலகளவிலான தொழில்நுட்ப தரத்தில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்குகிறது. இந்தத் திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செ...
இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படமாக ”ஹனு-மான்” இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்

இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படமாக ”ஹனு-மான்” இருக்கும் – வரலட்சுமி சரத்குமார்

சினிமா, திரைச் செய்தி
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான்.இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் "அஞ்சனாத்ரி" என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது.இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் பம்பரமாகச் சுழன்று வருகின்றனர். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை, விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் சென்னையில், தமிழ் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர்.இந்நிகழ்வினில்தயாரிப்பாளர் சைத்தன்யா பேசியதாவது… எல்லோருக்கும் அட்வான்ஸ் பொங்கல் வ...
“என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமான் ஆதங்கம்

“என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமான் ஆதங்கம்

திரைச் செய்தி, திரைத் துளி
ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், சிவா கிலாரி, இயக்குநர்கள் வ.கவ...
கபீர் சிங், அனிமல் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இணையும் சந்தீப் ரெட்டி வங்கா & T -Series பூஷன் குமார்

கபீர் சிங், அனிமல் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இணையும் சந்தீப் ரெட்டி வங்கா & T -Series பூஷன் குமார்

சினிமா, திரைச் செய்தி
பூஷன் குமார் & சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் இந்தியச் சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தி வருகிறார்கள்.  இவர்கள் கூட்டணியில் வெளியான கபீர் சிங், அனிமல் திரைப்படங்களின் வெற்றியைத்  தொடர்ந்து பிரபாஸின் 'ஸ்பிரிட்',  அனிமல் திரைப்படத்தின் சீக்குவல் ஆனான 'அனிமல் பார்க்'  மற்றும் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் புதிய படம் என வெளிவரவிருக்கும் மூன்று படங்களிலும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.தயாரிப்பாளர் பூஷன் குமார் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஆகிய இருவரும் வழக்கமான கூட்டணியாக இல்லாமல், ஒரு அசாதாரணமான கூட்டாண்மையை இந்திய சினிமாவுலகில் உருவாக்கி இருக்கிறார்கள்.‌ 'கபீர் சிங்' மற்றும் 'அனிமல்' போன்ற படங்களில் தொடர்ந்த இவர்களின் வெற்றிகரமான கூட்டணி... தயாரிப்பாளர்களுக்கு படைப்பு சுதந்திரத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது.. இது தொடர்பாக...