32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

திரைத் துளி

1078 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 14 / 72
செய்திகள் வரிசை (பக்கம் 14)
பல ஓடிடி தளங்களை உள்ளடக்கிய புதிய ஓடிடி தளம்  ”ஓடிடி ப்ளஸ்” சினிமா

பல ஓடிடி தளங்களை உள்ளடக்கிய புதிய ஓடிடி தளம் ”ஓடிடி ப்ளஸ்”

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகின்றன. இதற்கு ஒரு தீர்வாக வந்தவை தான் ஓடிடி தளங்கள். இவற்றின் மூலம் தங்கள் மொழி மட்டுமல்லாது வேறு மொழிகளிலும் ஒருவரது படைப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் வாய்ப்பு கிடைத்தது. […]

07/05/2024 Inbaaraja
“நீர் நிலைகள் நமக்கு அத்தியாவசியமானவை, அதை கலங்கடிக்க வேண்டாம்” – ரெஜினா கசாண்ட்ரா சினிமா

“நீர் நிலைகள் நமக்கு அத்தியாவசியமானவை, அதை கலங்கடிக்க வேண்டாம்” – ரெஜினா கசாண்ட்ரா

ஃபார்சி திரைப்படத்தில் ரேகாவாகவும், ராக்கெட் பாய்ஸ் திரைப்படத்தில் மிர்னாலினி சாராபாய் பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரெஜினா கசாண்ட்ரா திரைத்துறை மட்டுமின்றி சமூக பணிகளிலும் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா ஈடுபட்டார். சில தினங்களுக்கு முன்பு அழகிய புடவையில் அசத்தலாக தூய்மை பணியில் ஈடுபட்டதோடு நேற்று நடந்த நிகழ்வில் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளார். இதற்காக அவர் SUP மெரினா கிளப் -ஐ சேர்ந்த குழுவினரோடு […]

07/05/2024 Inbaaraja
13 படத்தின் டப்பிங் பணிகளை 13:13க்கு துவங்கிய ஜி.வி.பிரகாஷ் சினிமா

13 படத்தின் டப்பிங் பணிகளை 13:13க்கு துவங்கிய ஜி.வி.பிரகாஷ்

இசையைப் போலவே தனது தேர்ந்த கதைத் தேர்வின் மூலமும் சிறந்த நடிகராக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான டப்பிங் பணியைத் தொடங்கி இருக்கிறார் ஜிவி பிரகாஷ். மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் ’13’. இதன் படப்பிடிப்பு 80 நாட்கள் சென்னை […]

07/05/2024 Inbaaraja
ரசவாதி – சித்த வைத்தியரும், ஐ.டி. பெண்ணும் சினிமா

ரசவாதி – சித்த வைத்தியரும், ஐ.டி. பெண்ணும்

இயக்குநர் சாந்தகுமாரின் முதல் படமான மௌன குரு, தமிழில் மாபெரும் வெற்றி பெற்றதோடு கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆனது. அவரது இரண்டாவது வெளியீடான மகாமுனி 30 சர்வதேச விருதுகளுடன் 24 விருதுகளை ‘சிறந்த இயக்குநரு’க்காக வென்றது. இவரது அடுத்தப் படைப்பான ‘ரசவாதி – தி அல்கெமிஸ்ட்’, ஒரு காதல் ஆக்‌ஷன்-க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். சாந்தகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி இந்தப் […]

29/04/2024 Dinesh R
தீட்டு – ஆண்களுக்கான விழிப்புணர்வு பாடல் சினிமா

தீட்டு – ஆண்களுக்கான விழிப்புணர்வு பாடல்

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் விடுதலைக்காகவும் ஏராளம் பேசியவர் பெரியார். மனிதர்களுக்குள் ஜாதி பார்த்து ஒருவரிடம் மற்றவர் பேதம் காட்டி நடத்துவது மட்டுமே தீண்டாமை அல்ல, வீட்டுக்குள்ளேயே பெண்களை அவர்களது உடலியல் காரணங்களுக்காக ஒதுக்கி வைப்பதும் தீண்டாமை என்று கூறியவர் பெரியார். சமுதாயத்தின் சம பங்கு வகிக்கும் பெண்களைத் தங்கள் வீட்டுக்குள்ளேயே மாதவிடாய்க் காலங்களில் ஒதுக்கித் தனிமைப்படுத்துவது அறிவியலுக்கு எதிரானது அல்லவா? இப்படிப் பெரியாரின் கருத்தை ஆமோதித்தும், அறிவியல் உண்மையை உயர்த்திப் பிடித்தும் பெண்களைப் போற்றும் விதத்தில் ‘தீட்டு’ என்கிற […]

24/04/2024 Inbaaraja
நின்னு விளையாடு | ஜல்லிக்கட்டு காளையா? காதலா? இது புதிது

நின்னு விளையாடு | ஜல்லிக்கட்டு காளையா? காதலா?

ராஜ் பீகாக் மூவீஸ் சார்பில் எம். கார்த்திக் தயாரிக்கும் படம் ‘நின்னு விளையாடு’ ஆகும். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக தினேஷ் மாஸ்டரும், கதாநாயகியாக நந்தனா ஆனந்தும் நடிக்கின்றனர். தீபா சங்கர், பழ. கருப்பையா, ‘பசங்க’ சிவக்குமார், சாவித்திரி, சங்கவி, ஜோதி, மதுரை குமரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக சத்திய தேவ் உதயசங்கரும், ஒளிப்பதிவாளராகப் பிச்சுமணியும், படத்தொகுப்பாளராக கி. சங்கரும் தொழில்நுட்பப் பணிகளைக் கவனிக்க, சி. சௌந்தர்ராஜன் படத்தினை இயக்குகிறார். எம். சரத்குமாரும், கீர்த்தி வாசனும் இணைந்து தயாரிக்கின்றனர். […]

24/04/2024 Dinesh R
சூது கவ்வும் – 2 | சூரு என்றால் என்ன? சினிமா

சூது கவ்வும் – 2 | சூரு என்றால் என்ன?

தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் தயாரிப்பில் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ராதாரவி, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து மண்டைக்கு சூரு ஏறுதே எனும் உற்சாகமிக்க பாடல் திங்கட்கிழமை மாலை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைக் கல்லூரியிலும், லண்டன் டிரினிட்டி கல்லூரியிலும் பயின்ற எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ள இப்பாடலை, பிரபல மலேசிய […]

23/04/2024 Inbaaraja
சாண்டல்வுட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் அயல் சினிமா

சாண்டல்வுட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ்

கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னடத் திரையுலகில் அறிமுகமாகிறார். புகழ்பெற்ற தென்னிந்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கர்நாடக சக்கரவர்த்தி’ டாக்டர் சிவராஜ் குமார் மற்றும் ‘நடராக்ஷசா’ டாலி தனஞ்சயா நடிப்பில் தயாராகி வரும் ‘உத்தரகாண்டா’ எனும் திரைப்படத்தின் மூலம் கன்னடத் திரையுலகில் அறிமுகமாகிறார். இந்தத் திரைப்படத்தில் அவர் டாலி தனஞ்சயாவுக்கு ஜோடியாக ‘துர்கி’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் […]

23/04/2024 Inbaaraja
சத்யராஜ், ஜெய், யோகிபாபு | பேபி & பேபி சினிமா

சத்யராஜ், ஜெய், யோகிபாபு | பேபி & பேபி

GPS Creations சார்பில் G.P. செல்வகுமார் தயாரிப்பில், Yuvaraj Films சார்பில் B. யுவராஜ், வெளியிட, நடிகர்கள் ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிப்பில், அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் பேபி & பேபி. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த வகையில் குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. காமெடியும், எமோஷனும் […]

23/04/2024 Inbaaraja
தன் பிறந்தநாளில் தன் தாயாரின் பெயரில் அறக்கட்டளை துவங்கிய நடிகர் உதயா சினிமா

தன் பிறந்தநாளில் தன் தாயாரின் பெயரில் அறக்கட்டளை துவங்கிய நடிகர் உதயா

தன் பிறந்தநாளை முன்னிட்டு தன் தாயாரின் பெயரில் வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை துவங்கியுள்ள நடிகர் உதயா அது தொடர்பான செய்திக் குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைவருக்கும் அன்பு வணக்கம். உங்களின் வாழ்த்துகளுடன் எனது பிறந்தநாளான இன்று கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்குவது குறித்த தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை எனும் பெயரில் மறைந்த எனது தாயார் நினைவாக இந்த தொண்டு அமைப்பை நான் தொடங்கியுள்ளேன். […]

23/04/2024 Inbaaraja
வெளியான உடனே ஹிட்டடித்த சரிகமா ஒரிஜினல்ஸின் “எண்ட ஓமனே” ஆல்பம் சினிமா

வெளியான உடனே ஹிட்டடித்த சரிகமா ஒரிஜினல்ஸின் “எண்ட ஓமனே” ஆல்பம்

உலகளவில் இசைத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் சரிகமா நிறுவனம், அடுத்ததாக, தர்ஷன், அஞ்சு குரியன் நடிப்பில், கார்த்திக் ஶ்ரீ இயக்கத்தில், S கணேசன் இசையில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல் வரிகளில், பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன், ஹர்ஷவர்தன் குரல்களில், இளைஞர்களை கொள்ளை கொள்ளும் அற்புதமான “எண்ட ஓமனே” எனும் ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளது. உலகளவில் இசைத்துறையில் ஆளுமைமிக்க நிறுவனமாக, பல்லாண்டுகளாக கொடிகட்டிப்பறக்கும் நிறுவனம் “சரிகமா”. திரை இசைப் பாடல்கள் மட்டுமின்றி, சுயாதீன இசையை தொடர்ந்து ஆதரித்து வரும் […]

18/04/2024 Inbaaraja
மரக்கன்று நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய வைபவ் & செல் முருகன் சினிமா

மரக்கன்று நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய வைபவ் & செல் முருகன்

மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை நட்டார் நடிகர் வைபவ்! நடிகர் வைபவ்வின் பெயரிடப்படாத 27 வது திரைப்படம் சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. நடிகர் வைபவுடன் செல்முருகனும் இணைந்து நடித்து வருகிறார் இந்நிலையில் இன்று மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி விவேக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, வைபவ்வின் 27 வது திரைப்பட […]

17/04/2024 Inbaaraja
வேல்ஸ் ஐசரி கணேஷிடமிருந்து கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுக் கொண்ட ராம்சரண் சினிமா

வேல்ஸ் ஐசரி கணேஷிடமிருந்து கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுக் கொண்ட ராம்சரண்

சென்னை, பல்லாவரத்தில் நடைபெற்ற விஸ்டாஸின் பதினான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில், புகழ்பெற்ற இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவோரான ராம்சரணுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து அங்கீகரித்துள்ளது. இந்த நிகழ்வு பல்லாவரம் விஸ்டாஸ் வளாகத்தில் உள்ள வேலன் அரங்கில் நடைபெற்றது. மாலை 4:00 மணிக்கு தொடங்கிய விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) தலைவர் பேராசிரியர் டி.ஜி.சீத்தாராம் கலந்து கொண்டார். […]

16/04/2024 Inbaaraja
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அடுத்த ஸ்பெஷல் சீரிஸ் ”உப்பு புளி காரம்” சினிமா

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அடுத்த ஸ்பெஷல் சீரிஸ் ”உப்பு புளி காரம்”

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கைப் மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்கி வருகிறது. தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த புதிய […]

16/04/2024 Inbaaraja
சாதியை எதிர்த்தவர்கள் சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் என இரண்டு வகை உண்டு..  – ரஞ்சித் சினிமா

சாதியை எதிர்த்தவர்கள் சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் என இரண்டு வகை உண்டு.. – ரஞ்சித்

புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு “வானம் கலைத் திருவிழா” சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் கடந்த 05.04.2024 அன்று தலித் வரலாற்று மாதக் கண்காட்சியுடன் துவங்கியது. இதன் இரண்டாம் நிகழ்வாக PK ரோசி திரைப்பட விழா சென்னை பிரசாத் லேபில் முதல் நாளான 08.04.2024 அன்று இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் இயக்குநர் […]

13/04/2024 Inbaaraja