32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

JioHotstar South Unbound – தென்னிந்தியப் படைப்புத் திறனைக் கொண்டாடும் விழா

Dinesh R சேலம் Published: 06/12/2025 2 நிமிட வாசிப்பு Updated: 09/12/2025 OTT
எழுத்து அளவு:

கிருஷ்ணன் குட்டி (JioStar Head Entertainment Business, South Cluster), பாலச்சந்திரன். R (JioStar Executive Vice President – Tamil), R. மகேந்திரன் (CEO – Turmeric Media) ஆகியோர், நவம்பர் 5 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் ‘JioHotstar South Unbound’ என்ற முக்கிய நிகழ்வைப் பற்றி விளக்கினர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்த சந்திப்பில், நிகழ்வின் நோக்கம், தென்னிந்தியக் கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் அது உருவாக்கும் தாக்கம் போன்ற பல அம்சங்கள் குறித்துக் குழுவினர் முதல்வரிடம் பகிர்ந்தனர். மேலும், ‘Letter of Engagement’ என்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிப்புகளும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஜியோ ஸ்டாட் வழங்கும் ஆதரவைக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.

டிசம்பர் 9, 2025 அன்று சென்னை நகரில் நடைபெறும் JioHotstar South Unbound நிகழ்வு, தென்னிந்திய சினிமா மற்றும் படைப்புத் திறனைக் கொண்டாடும் முக்கிய விழாவாகும். தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநர்கள், படைப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள திறமைகள் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள். ஜியோ ஹாட்ஸ்டாரின், புதிய தென் மாநில படைப்புகள், கதைகள், இந்த நிகழ்வில் வெளியிடப்படும்.

இந்த விழாவைத் தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் பத்மபூஷண் திரு. கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

தென்னிந்திய நடிகர்கள், இயக்குநர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் முன்னணி படைப்பாளர்கள் பங்கேற்கும் இந்த விழா, தென்னிந்தியக் கலை மற்றும் கதை கூறும் மரபின் தாக்கத்தை உலகுக்கு முன்னிறுத்தும் முக்கிய தருணமாக இருக்கும். மேலும், தென்னிந்தியப் பொழுதுபோக்கு உலகை உயர்த்த, வளர்க்கப் பலப்படுத்த ஜியோ ஸ்டார் மேற்கொள்ளும் தொடர்ந்த பங்களிப்பையும் இது மீண்டும் வலியுறுத்துகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.