Shadow

விவேகம் படத்தில் கபிலன் வைரமுத்து

Kabilan Vairamuthu in Vivegam

பல கவிதை தொகுப்புகள், சிறு கதைகள் மற்றும் நாவல்கள் எழுதியுள்ள கபிலன் வைரமுத்து, கவண் படம் மூலமாகத் திரைக்கதை எழுத்தாளரானார்.

தற்போது இவர், அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவாகி, ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசாக இருக்கும் விவேகம் படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

விவேகம் குறித்து கபிலன் வைரமுத்து பேசுகையில், ”இப்படத்தில் இரண்டு பாடல்கள் இயற்றியது மட்டுமில்லாமல் இப்படத்தின் கதை விவாதத்திலும், திரைக்கதை எழுதுவதிலும் பங்கேற்று எனது பங்களித்ப்பை அளித்துள்ளேன். சினிமாவின் உயிர் நாடி அதன் திரைக்கதை என்பதை நம்புபவன் நான். பாடலாசிரியராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் திறம்பட நான் பணிபுரிய இயக்குநர் சிவா என் மீது முழு நம்பிக்கை வைத்து, வேண்டிய சுதந்திரத்தை அளித்ததே காரனம். அவரின் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் அவரை மேலும் பல உயரங்களுக்கு நிச்சயம் கொண்டு போகும்.

இப்படத்தின் மூலமாக அஜித் ஸாரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் உரையாடியது ஒரு நல்ல புத்தகத்தைப் படித்த உணர்வைத் தந்தது. அவரது தொலைநோக்கு பார்வை, தொழில் பக்தி, உணவு பழக்க வழக்கம், கடுமையான உடல் பயிற்சி ஆகியவை அவர் மேல் நான் கொண்டுள்ள மரியாதையை மேலும் பெரிதாக்கியது. விவேகம் படத்தின் சில காட்சிகளைப் பார்க்க நேர்ந்தது. நான் எதிர்பார்த்ததை விட காட்சியமைப்புகள் அருமையாக அமைந்துள்ளன. ரசிகர்களுடன் இணைந்து ஆகஸ்ட் 24 ஆம் தேதி திரையரங்குகளில் பார்க்க உற்சாகத்துடன் உள்ளேன்” என்றார்.