Shadow

களத்தூர் கிராமத்து மிதுன்

Hero Mithun Kumar

செப்டம்பர் 15 அன்று, “களத்தூர் கிராமம்” எனும் படம் வெளியாக உள்ளது. இசைஞானி இளையராஜா அப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தப் படத்தின் நாயகன் மிதுன் குமார். சினிமா பின்னணி உள்ள அவரது குடும்பம், “ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ்” என்ற பேனரில் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், மகாநதி போன்ற படங்களைத் தயாரித்தவர்கள்.

தற்போது, மிதுன் “ஐராவத் என்டர்டெயின்மென்ட்ஸ்” எனும் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். அந்நிறுவனத்தின் மூலம், 16 வயதினிலே படத்தின் டிஜிட்டல் வெர்ஷனைக் கொண்டு வரவுள்ளார். டால்பி அட்மாஸ் 11.1 டிஜிட்டல் சரவுண்டில் அதி நவீன் தொழில்நுட்பத்தால் ரீஸ்டோர் செய்யப்பட்டுள்ள முதல் இந்தியப் படமிது என்பது, “16 வயதினிலே” படத்துக்குக் கிடைத்துள்ள புதிய அங்கீகாரமாகும். மிதுன் தான் டிஜிட்டல் வெர்ஷனின் ரீஸ்டோரேஷன் இயக்குநரும் கூட!

டிஜிட்டல் ’16 வயதினிலே’ படத்தின் பிரத்தியேக திரையிடலைக் கண்ட ரஜினிகாந்த், கமலஹாசன், பாரதிராஜா, பாக்கியராஜ் ஆகியோர் படத்தின் புதிய பொலிவைக் கண்டு வியந்து, மிதுனின் திறமையை மிகவும் பாராட்டினர்.