Search

கல்யாண் ராமின் மக்களை காக்கும் “டெவில்” நவம்பர் 24ல் வருகிறது

நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் –  அவரின்  திரையுலக வாழ்க்கை பயணத்தின் ஆரம்ப நிலையிலிருந்தே  தனித்துவமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர்.  கடந்த  ஆண்டு  தெலுங்கு  திரையுலகில் ‘பிம்பிசாரா’  எனும்  படத்தின்  மூலம்  மிகப்பெரும்  வெற்றியைப்  பெற்ற கல்யாண் ராம்,  சுவராசியமான மற்றொரு படத்துடன் மீண்டும்  வருகை  தந்திருக்கிறார்.

மற்றொரு தனித்துவமான திரைக்கதை கொண்ட “டெவில்” திரைப்படம்  கல்யாண் ராம் நடிப்பில் உருவாகி, அவரின் ரசிகர்களையும் மக்களையும் குஷிப்படுத்த காத்துக் கொண்டு இருக்கிறது. கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வகையில்  இப்படத்திற்கு ‘டெவில்’ என பெயரிட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.  மேலும்  இத்திரைப்படம், பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் செயல்பட்ட ரகசிய உளவாளி  ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘டெவில்’ படத்தின் பிரத்யேக காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது.  இந்தத்  திரைப்படம்  தெலுங்கில்  மட்டுமல்லாமல் இந்தியிலும் வெளியாகிறது.  இதற்காக  தயாரிப்பாளர்கள் அண்மையில்  இந்தி  பதிப்பின் காணொளியையும்  வெளியிட்டனர் இது படத்தை பற்றிய எதிர்பார்ப்பை  மேலும் அதிகரித்திருக்கிறது.

இப்படத்தினைப்  பற்றிய புதிய மற்றும் கூடுதல் தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  இது  கல்யாண் ராமின் ரசிகர்கள் மற்றும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இதனை தயாரிப்பாளர்கள் ‘நவம்பர் 24- 2023 டிகோடிங்’ என எழுதப்பட்ட ஒரு வசீகரமான மற்றும் பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.

இந்தத்  திரைப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தேவன்ஷ் நாமா வழங்கும் இந்த திரைப்படத்தை அபிஷேக் பிக்சர்ஸ்  என்ற  பட  நிறுவனம்  சார்பில்  தயாரிப்பாளர் அபிஷேக் நாமா தயாரித்திருக்கிறார்.

நவீன் மேடாராம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘டெவில்’ எனும் இந்த திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை  ஸ்ரீகாந்த் விசா எழுதியுள்ளார்.  எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு  செய்திருக்கும்  இந்த திரைப்படத்திற்கு  ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்திருக்கிறார். பீரியாடிக் – ஸ்பை -த்ரில்லர்  திரைப்படமான “டெவில்” குறித்தான கூடுதல் விவரங்கள் விரைவில்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.