கல்யாண் ராமின் மக்களை காக்கும் “டெவில்” நவம்பர் 24ல் வருகிறது
நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் - அவரின் திரையுலக வாழ்க்கை பயணத்தின் ஆரம்ப நிலையிலிருந்தே தனித்துவமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர். கடந்த ஆண்டு தெலுங்கு திரையுலகில் 'பிம்பிசாரா' எனும் படத்தின் மூலம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற கல்யாண் ராம், சுவராசியமான மற்றொரு படத்துடன் மீண்டும் வருகை தந்திருக்கிறார்.
மற்றொரு தனித்துவமான திரைக்கதை கொண்ட “டெவில்” திரைப்படம் கல்யாண் ராம் நடிப்பில் உருவாகி, அவரின் ரசிகர்களையும் மக்களையும் குஷிப்படுத்த காத்துக் கொண்டு இருக்கிறது. கதாநாயகனின் மூர்க்கத்தனத்தை குறிக்கும் வகையில் இப்படத்திற்கு 'டெவில்' என பெயரிட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும் இத்திரைப்படம், பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் செயல்பட்ட ரகசிய உளவாளி ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
'டெவில்' படத்...