Shadow

கும்பகோணம் குணா

Kathir movie

வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் பெண் தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் படம் ‘கதிர்’. தோழர் அரங்கன் இயக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது.

கும்பகோணத்தில் பஸ் ஸ்டாண்ட் குணா என்பவர் அனைவருக்கும் தெரிந்தவராக நிஜத்தில் வாழ்ந்தவர். குணாவாக கிஷோர் நடிக்கிறார். இவரை எதிர்த்து மோதும் சங்கிலி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில், 8 முறை குங் ஃபூ-வில் பிளாக் பெல்ட் வாங்கிய மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடிக்கிறார். கிஷோர் – மாஸ்டர் ராஜநாயகம் மோதும் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட்க்கு நிகராக எடுக்கப்பட்டு வருகிறது.

புதுமுகங்கள் விஷ்வா கதாநாயகனாகவும், நீரஜா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் கஞ்சா கருப்பு, ’கோலி சோடா’ பாண்டி, சுப்புராஜ், ‘பசங்க’ சிவகுமார், செந்தி, சிந்து, பருத்திவீரன் சுஜாதா, புதுமுகம் சங்கவி ஆகியோர் நடிக்கிறார்கள்.

சேரன் பாண்டியன், சிந்துநதி பூ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு ஹிட் பாடல்கள் கொடுத்த செளந்தர்யன் இசையமைக்கும் 50 வது படமாக உருவாகும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பும் வகையில் உள்ளன. அண்ணாமலை, கபிலன், கிருதயா ஆகியோர் எழுதியுள்ளனர். மேலும், இப்படத்தின் ஒரு பாடலுக்கு முன்னணி ஹீரோயின் ஒருவர் நடனம் ஆட இருக்கிறார்.

சமூக அக்கறையோடு வாழும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் காதல் கடந்து போனால், என்ன நடக்கும் என்பதை எதார்த்தத்தோடும், தமிழ்க் கலாச்சாரப் பண்பாட்டோடும், பெண்கள் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய அளவுக்கு காமெடியோடு ஜனரஞ்சகமான படமாக, தோழர் அரங்கன் இப்படத்தை உருவாக்கி வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் பலரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்குத் தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய, மிரட்டல் செல்வா சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆர்.எம்.நந்தகுமார் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வரும் இப்படத்திற்காகச் சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுப் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதோடு, கும்பகோணம், மயிலாடுதுறை, சென்னை ஆகிய பகுதிகளிலும் ‘கதிர்’ படமாக்கப்பட்டுள்ளது.