32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

கேயாஸ் தியரியும், தொலைந்து போகும் நாயகியும்

Dinesh R சேலம் Published: 27/09/2017 2 நிமிட வாசிப்பு Updated: 28/11/2017 சினிமா
எழுத்து அளவு:

Karthikeyan kaanamal pona kadhaliyum

இந்திய இராணுவத்தில், 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் இருந்த திரு.M.A.பாலா இயக்குகிற படம், ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ, அதே மாதிரி, உலகின் ஏதோ ஒரு மூலையில் பட்டாம்பூச்சி சந்தோசமாய்ச் சிறகடித்து சுற்றித் திரிவதற்கும், இன்னொரு பக்கம் சம்பந்தமேயில்லாமல் எரிமலைகள் வெடித்துச் சிதறுவதற்கும் கூட ஒரே காரணம் இருக்கலாம் என்கிறது கேயாஸ் தேற்றம். தமிழ் சினிமாக்களில், ‘தசாவதாரம்’ படத்திற்குப் பிறகு இவ்விதியைப் பயன்படுத்தி, சுவாரசியமாய்த் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் M.A.பாலா. ‘டிப்ளமோ இன் ஃப்லிம் மேக்கிங்’ படித்து விட்டு, பல குறும்படங்களையும் டெலி ஃபிலிம்களையும் இயக்கியுள்ளார்.

பார்க்காத காதல், சொல்லாத காதல் என தமிழ் சினிமாவின் அகராதியில் காதல் இல்லாத பக்கமே இல்லை. இந்தப் படத்தில், தன்னுடைய காதலியைத் தொலைத்து விட்டுத் தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில், ஒரு நாளில் நேர்கிற விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையை இன்னும் பலப்படுத்துகிறது. இறுதியில் கார்த்திகேயன் தனது காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பது அத்தனை சுவாரசியமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

நடிகர்கள்:

>> தீபக்
>> S.பிளாக் பாண்டி
>> S.S.ஜெய்சிந்த்
>> ஹரிதா
>> மலர்
>> கொட்டாச்சி
>> ஜாங்கிரி மதுமிதா
>> மிப்பு
>> ஹேமா
>> மகேஷ்

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

>> தயாரிப்பு – மாரியப்பன் ராஜகோபால்
>> இணை தயாரிப்பு – K. திலகர்
>> எழுத்து இயக்கம் – M.A. பாலா
>> ஒளிப்பதிவு – டேவிட் ஜான் D.F.TECH
>> இசை – F.ராஜ் பரத்
>> படத்தொகுப்பு – ஆனந்த் ஜெரால்டின்
>> பாடல் – வடிவரசு

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.