அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்கள் புகழ் இயக்குநர் திருமலை இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள கமர்ஷியல் த்ரில்லர் திரைப்படம் “மான் வேட்டை” ஆகும். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தினை T Creations சார்பில் இயக்குநர் M.திருமலை இப்படத்தினைத் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 14 ஆம் தேதி அன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் K.ராஜன், “இயக்குநர் திருமலை அனைவருக்கும் உதவக் கூடிய நல்ல உள்ளம் கொண்ட நபர். இந்தப் படத்தை சிறப்பான முறையில் எடுத்து முடித்து இருக்கிறார்கள். மான்வேட்டை படத்தைக் கடின உழைப்பையும், அர்பணிப்பையும் அளித்து உருவாக்கி இருக்கின்றனர். இந்தப் படம் வசூல்வேட்டை காண வேண்டும். இந்தப் படம் வெற்றி பெற்றால் பல சிறிய தயாரிப்பாளர்கள் வருவார்கள். இந்தப் படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்” என்றார்.
பாஜக அரசியல் பிரமுகர் கரு.நாகராஜன், “திருமலை மிக தைரியமானவர். அனைத்திற்கும் குரல் கொடுக்கக் கூடியவர். திரைப்படத்தை வாழ வைக்கக் கூடியவர்கள் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தான். திரைப்படங்களை வெளியிடுவதில் இருக்கும் சிக்கல்களை அமைப்பாய் இணைந்து அவர்கள் தீர்க்க வேண்டும். இந்தப் படம் வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் JSK சதீஷ்குமார், “ஒரு படத்தின் ஆடியோ வெற்றி பெற்றாலே அதை வைத்துப் படத்திற்கு மிகப் பெரிய வருவாய் ஈட்டலாம். இதை இந்தப் படம் சிறப்பாகச் செய்துள்ளது. நல்ல படங்கள் எப்பொழுதும் வெற்றி பெறும். அதற்கு பக்கத்தில் இருக்கும் மலையாள, கன்னட மொழிப் படங்கள் மிகப் பெரிய உதாரணம். இந்த மான் வேட்டை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்” என்றார்.
தொழில்நுட்பக் குழு:
>> எழுத்து இயக்கம் – M.திருமலை
>> இசை – ஶ்ரீகாந்த் தேவா
>> ஒளிப்பதிவு – விஜய் வில்சன்
>> வசனம் – வேலு சுப்பிரமணியம்
>> படத்தொகுப்பு – சுதா, லக்ஷ்மணன்
>> பாடல் – விவேகா , சொற்கோ கருணாநிதி, ஏக்நாத்
>> மக்கள் தொடர்பு – பரணி அழகிரி, திருமுருகன்