32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

புதிய சந்திரமுகியாக கங்கனா ரனாவத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Inbaaraja சேலம் Published: 05/08/2023 2 நிமிட வாசிப்பு Updated: 22/08/2023 சினிமா
எழுத்து அளவு:

பிரம்மாண்டமான படங்களைத் தயாரிப்பதற்கு இந்திய அளவில் பெயர்பெற்ற தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடெக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் சந்திரமுகி-2 திரைப்படம் பலகோடி பொருட்செலவில் உருவாகி வருகிறது.  திகில்  காமெடி கலந்து பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் சந்திரமுகி – 2 திரைப்படத்தில் சந்திரமுகியாக நடிக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் முதல் தோற்றப் புகைப்படம், அதாவது  ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மிகப் பெரிய  வெற்றியைப் பெற்ற  திரைப்படங்களை இயக்கிய  பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது  படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்திற்காக தேசிய விருது பெற்ற தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார்.

 

மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்  மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஜி கே எம் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

‘சந்திரமுகி 2’  இந்த ஆண்டில், தமிழ் திரையுலகில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்றாகவுள்ளது.  படம் குறித்து தற்போது அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திவருகிறது.

வேட்டையனாக நடிக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் –ன் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் சில தினங்களுக்கு முன்பு  வெளியாகி பெரும் வரவேற்ப்பைப் பெற்ற  நிலையில், தற்போது வெளியாகியுள்ள கங்கனா ரனாவத்தின் கதாப்பாத்திரமான புதிய சந்திரமுகியின் தோற்றமும்   ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சந்திரமுகியாக அவரது தோற்றம்,  கர்வமும் மிடுக்கும் மிகுந்த மிரட்டலான மங்கையாக, வசீகரிக்கும் அழகுடன், அமைந்துள்ளது.  மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரமான சந்திரமுகியை மீண்டும் தரிசிக்கும் மகிழ்ச்சியில்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் ஆர்வத்துடன் ஒருவருக்கொருவர் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

Inbaaraja
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.