32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

Patriot – நயன்தாரா ஸ்பெஷல் போஸ்டர்

Dinesh R சேலம் Published: 09/03/2026 2 நிமிட வாசிப்பு Updated: 15/03/2026 Movie Posters
எழுத்து அளவு:

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “பேட்ரியாட்” திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்புப் போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த மிகப்பெரிய மல்டி ஸ்டார்ரர் திரைப்படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் ஞாயிறு காலை 10 மணி முதல் ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் வெளியிடப்பட்டன.

இந்தப் படத்தில் நயன்தாரா முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரேவதி, கிரேஸ் ஆண்டனி, கீதீ சங்கீதா, ஸ்ரீ பார்வதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் செரின் ஷிஹாப் ஆகியோரும் நடித்துள்ளனர்.

முன்னதாக வெளியான செகண்ட் லுக் போஸ்டரில் மம்மூட்டி, மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் மாஸ் ஆக்ஷன் லுக்கில் இடம்பெற்றிருந்தனர். அந்தக் காட்சியின் பின்னணி (BTS) வீடியோவும் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஸ்பை த்ரில்லர் திரைப்படத்தில் மம்முட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, அசர்பைஜான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, மம்மூட்டியும் மோகன்லாலும் இணைந்து நடிப்பதும், அதில் நயன்தாரா இணைந்திருப்பதும் படத்தின் முக்கிய சிறப்பாகும்.

இந்தப் படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை மனுஷ் நந்தன் மேற்கொண்டுள்ளார்.

ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி மற்றும் கிச்சப்பு பிலிம்ஸ் நிறுவனங்களின் சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இந்தப் படம், மலையாள சினிமாவில் சர்வதேசத் தரத்தில் உருவாகும் மிகப்பெரிய ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது.

மக்கள் தொடர்பு – யுவராஜ்
விநியோகம் – ஆன் மேகா மீடியா (Aan Mega Media)

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.