Shadow

பழகிய நாட்கள் – இருவகை காதலைப் பற்றிப் பேசும் படம்

Pazhagiya-Naatkal-movie

காதலை மையமாக வைத்து தமிழில் பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், இப்படம் காதலின் குணாதிசயங்களையும் காதல் வயப்படும் ஜோடிகளின் மனப்போக்கையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் காட்டப்பட்டுள்ளது. காதலிப்பது என்பது இரு வகைப்படும். ஒன்று, இளவயது காதல். இரண்டாம் வகை, முதிர்ந்த காதல். இந்த இரு வகை காதல் பற்றியும் இயக்குநர் ராம்தேவ் எதார்த்தமாகவும் இயல்பாகவும், ஒரு காதல் ஜோடியை மையமாகத் திரைக்கதையில் அமர்த்தி, சுவைப்பட, துளி கூட விரசமின்றி இக்காதல் கதையை வழங்கியுள்ளார்.

புதுமுக அறிமுகங்களான மீரானும் மேகனாவும் காதல் ஜோடிகளாகப் படத்தில் வலம் வந்துள்ளனர். இயக்குநர் ஸ்ரீநாத், சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், நெல்லை சிவா, Monkey ரவி, வின்சென்ட் ராய், சிவகுமார், சுஜாதா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர்.

செந்தில் கணேஷ் ஒரு பாடல் பாடியுள்ளதோடு நடனமும் ஆடியுள்ளார். திரைப்படத்தின் முற்பகுதி காதல் காட்சிகளை மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிற்பகுதி காதல் காட்சிகளை பிலிப் விஜயகுமார் தனது காமிராவினால் பதிவு செய்துள்ளார். இயக்குநரும் கபிலனும் பாடல்களை எழுதியுள்ளனர்.

ஜான் A. அலெக்சிஸ், ஷேக் மீரா, மனிதன் ஆகிய மூவரும் இசையமைத்துள்ளனர். தனது படைப்பு பற்றி இயக்குநர் நம்மிடையே பேசுகையில், காதலர் தினத்தை ஒட்டி வெளியான இப்படம் இளம் வயதினரைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது.