32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

சாம் CS – ஒரு சிறந்த இசையமைப்பாளர்

Dinesh R சேலம் Published: 02/03/2018 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

Music director Sam CS

விக்ரம் வேதாவில் கலக்கிய இசையமைப்பாளர் சாம் CS தான் ‘லைக்காவின் கரு’ படத்திற்கு இசையமைத்துள்ளார். தனது படத்தின் இசையில் அதிக கவனம் செலுத்தும் இயக்குநர் விஜய் பேசுகையில், ” சமீப காலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் CS தான். கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாகப் புரிந்து கொண்டு அசத்துபவர் அவர். இந்தப் படத்தின் அவரது பாடல்கள், எனது எல்லாப் படங்களையும் விட மிகச் சிறந்த பாடல்களைக் கொண்டதாக நிச்சயம் அமையும். ‘லைகாவின் கரு’ படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் தந்திருக்கும் வரவேற்பு எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை. ஏனென்றால் நான் அதை எதிர்பார்த்ததுதான். இந்தப் பாடல்களைப் போலவே ‘லைக்காவின் கரு’ படமும் ஜீவனுடன் அழகாக இருக்கும் என உறுதியாகக் கூறுவேன்” என்றார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில், ஆண்டனியின் படத்தொகுப்பில் ‘லைகாவின் கரு’ அருமையானதொரு படமாக உருவாகியுள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.