செப்டம்பர் 13 அன்று, விநாயகர் சதுர்த்திக்குச் சீமராஜா வெளியாகவுள்ளது. பொன்ராம், D.இமான், சிவகார்த்திகேயன், சூரி இணையின் படம் திருவிழா கொண்டாட்டத்திற்கு உத்திரவாதம் அளிப்பதால், படம் குறித்த எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது. குடும்பங்கள் கொண்டாடுவதற்கு ஏதுவாய் படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது.