சீமராஜா விமர்சனம்
"முத்து, அருணாச்சலம், லிங்காலாம் பார்த்திருக்கீங்களா பங்கு? அதுல வர்ற மாதிரி நான் பெரிய பணக்காரனாவும், ராஜ பரம்பரையாவும் வரணும்" - சிவகார்த்திகேயன்
"வர வச்சுடலாம்." - பொன்ராம்
"எம்.ஜி.ஆர்., ராஜாவ நடிச்சு கத்திச்சண்டை போடுற படம்லாம் பார்த்திருக்கீங்க?"
"ஓ.. பார்த்திருக்கேனே! சிறப்பா பண்ணிடலாம்."
"ஐய்யோ பங்கு! அப்படிலாம் பண்ணிடாதீங்க. 'இவன் ஏதோ பிளான் பண்ணிட்டான்டா!' என ஓட்டிடுவானுங்க மீம் பசங்க." - சி.கா
"அப்ப ரஜினி மட்டும் போதுங்கிறீங்களா? ராஜா கெட்டப் வேணுமா?" - பொ.ரா
"கண்டிப்பா வேணும் பங்கு. எம்.ஜி.ஆர். லெவலுக்குப் போனா வைவாங்க, அதுமில்லாம அது ரொம்ப ஓல்ட் ஸ்டைல். நாம சின்னதா பாகுபலி அளவுக்கு, ராஜமெளலி 'மஹாதீரா'ல வச்ச மாதிரி லேசா ராஜா சீனை வச்சுப்போம்."
"சரி அப்படியே பண்ணிடலாம்."
"முழுசா பாகுபலி மாதிரியும் இருக்கக்கூடாது. எம்.ஜி.ஆர். டச் கண்டிப்பா வேணும். நம்பியார் கிட்ட இருந்து...