இமைக்கா நொடிகள் விமர்சனம்
கொலையை ரசித்துச் செய்யும் ஒரு கொலைக்காரன், அவனைப் பிடிக்க நினைக்கும் ஒரு பெண் சி.பி.ஐ. அதிகாரி என இருவருக்கு இடையில் நடக்கும் ஆடுபுலியாட்டம்தான் இமைக்கா நொடிகள் படத்தின் கதை.
ருத்ராவெனும் சைக்கோவாக அனுராக் கஷ்யப் அதகளப்படுத்தியுள்ளார். அனுராகின் அட்டகாசமான உடற்மொழியுடன், மிரட்டும் முகபாவனையுடன், மகிழ் திருமேனியின் கம்பீரமான குரல் செம்புலப் பெயல் நீர் போல் ஒன்றிக் கொள்கிறது. ட்ரெய்லரிலேயே அந்த ரசவாதத்தினை உணரலாம். படத்திலேயோ, அது தொடக்கம் முதல் கவ்விக் கொள்கிறது. வில்லனாக அனுராக் கஷ்யபையும், அவருக்கு டப்பிங் தர மகிழ் திருமேனியையும் தேர்வு செய்ததற்காகவே இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அதை முழுதும் ரசிக்க முடியாதளவுக்கு, குறுக்கும் நெடுக்குமாக அதர்வா - ராஷி கண்ணாவின் காதல் அத்தியாயம் குறுக்கிடுகிறது. படத்தின் நீளமோ அயர்ச்சித் தருமளவுக்கு இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்களாக உள்ளது....