Shadow

Tag: இயக்குநர் பிரம்மா

சுழல் – தி வோர்டெக்ஸ் விமர்சனம்

சுழல் – தி வோர்டெக்ஸ் விமர்சனம்

OTT, Web Series
தமிழில் வெளிவரும் அமேசான் ப்ரைமின் முதல் வெப் சீரிஸ் இது. புஷ்கர் - காயத்ரி இணை எழுதிய இத்தொடரை, பிரம்மாவும் அனுசரணும் இயக்கியுள்ளனர். குற்றம் கடிதல், மகளிர் மட்டும் இயக்கிய பிரம்மா, முதல் நான்கு அத்தியாயங்களையும், கடைசி நான்கு அத்தியாயங்களை இயக்குநர் அனு சரணும் இயக்கியுள்ளனர். மலைகள் சூழ்ந்த சாம்பலூர் எனும் சின்ன ஊரிலிருந்து ஒரு பள்ளி மாணவி நிலா கடத்தப்படுகிறாள். அந்த வழக்கை விசாரிக்கும் சக்கரை எனும் சப் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் திருப்பமாக அமைகிறது. சக்கரையாக மிகத் திறம்பட நடித்துள்ளார் கதிர். இந்தத் தொடரின் நாயகன் இவரே! சின்னச் சின்ன முக பாவனைகளிலும் ஸ்கோர் செய்கிறார். இன்ஸ்பெக்டர் ரெஜினா தாமஸாக நடித்துள்ள ஷ்ரேயா ரெட்டி தான் தொடரின் நாயகி. இன்ஸ்பெக்டராக அவர் காட்டும் கம்பீரமும், ஓர் அம்மாவாக அவர் இளகும் இடமும் என கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாகப் ...
குற்றம் கடிதல் விமர்சனம்

குற்றம் கடிதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
62ஆவது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை இப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாம் வகுப்பு மாணவண் ஒருவனை ஆசிரியை அறைந்து விடுகிறார். அம்மாணவனுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது. பின் என்னானது என்று பரபரப்பாகச் செல்கிறது படத்தின் கதை. வழக்கமான சினிமாவிலிருந்து வழுவி ஒரு சம்பவத்தை பிரதானமாகக் கொண்டு படமெடுத்துள்ளார் இயக்குநர் பிரம்மா. கதாபாத்திரங்களின் அறிமுகம் முடிந்து, ஓர் ‘அறை’யில் தொடங்கும் படம் அசுர வேகமெடுக்கிறது. அங்குத் தொடங்கும் பதற்றத்தை, கடைசி நொடி வரை அவரது திரைக்கதை தக்க வைக்கிறது. பாலியல் கல்வியின் அவசியம் குறித்த முஸ்தீபுகளுடன் படம் தொடங்குகிறது. ஆனால் படம் சூடு பிடிக்கத் தொடங்கியதும், ‘ஆசிரியர் மாணவர்களை அடிக்கலாமா கூடாதா?’ என்று விவாதத்துக்குள் நுழைகிறது. விறுவிறுப்பை கடைசி வரை தக்க வைக்க இந்த விவாதம் உபயோகிக்கப்பட்டாலும், “பாம்புக...