Shadow

Tag: இயக்குநர் ராபர்ட் S.ராஜ்

களம் விமர்சனம்

களம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லாஜிக்கல் த்ரில்லர் என எதிர்பார்ப்பைத் தூண்டியது இப்படத்தின் டீசரும் ட்ரெயிலரும். ஒரு பாழடைந்த வீட்டை வாங்கிப் புணரமைத்து உபயோக்கின்றனர். அவ்வீட்டில் அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்கின்றன. அமானுஷ்யத்தின் பின்னாலுள்ள லாஜிக் என்னவென்பதே படத்தின் கதை. ஜீவாவின் சி.ஜி. படத்திற்குப் பலம். செந்தில் ராகவனின் கலை இயக்கத்தில், படத்தில் வரும் வீடு பல பரிமாணங்களைப் பெறுகிறது. படத்தின் மிக முக்கியமான பாத்திரமாக வருகிறது வீடு. படத்தின் களமான இவ்வீடே நாயகனுமாகும். ‘ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கதையுண்டு’ என்று படத்தின் டீசரில் வரும் வரி படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டியது. முகேஷின் ஒளிப்பதிவும், பிரபாகரின் படத்தொகுப்பும் அதற்கொரு முக்கிய காரணம். அந்த வீட்டின் கதையாக வரும் உப கதையும் அற்புதமாகவே இருந்தது. குறிப்பாக, அனிமேஷனில் அதைப் பிரமாதப்படுத்தியிருந்தார்கள். கணினி வரையியல் (CG) செய்துள்ள ஜீவாவின் உழை...