Shadow

Tag: இயக்குநர் S.சிவராமன்

காகித கப்பல் விமர்சனம்

காகித கப்பல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘காகித கப்பல்’ எனும் தலைப்பு வாழ்க்கையின் நிலையாமையைக் குறிக்கிறது. குப்பை பொறுக்குபவராக வாழ்க்கையைத் தொடங்கி கோடீஸ்வரராகி விடும் சிவபாலன் என்கின்ற அப்புக்குட்டியின் வாழ்க்கையில் நேரும் எதிர்பாராத சம்பவங்கள் தான் படத்தின் கதை. தலைப்பைக் கொண்டே முழுக் கதையையும் யூகித்து விடலாம். அழகர்சாமியின் குதிரை படத்திற்குப் பிறகு, ஹீரோவாக நடித்துள்ளார் அப்புக்குட்டி. அப்புக்குட்டி படிக்காதவர் என்றாலும் நல்ல உழைப்பாளி. ‘பாப்பாம்மாள் வேஸ்ட் பேப்பர் மார்ட்’ மூலம் நன்றாகச் சம்பாதிக்கிறார். அந்தக் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். சுங்க இலாகா விசாரணையின் பொழுது அவமானப்படும் காட்சியில் அவரது அனுபவம் தெரிகிறது. தான் விசாரணைக்குப் போயிட்டு வந்தது குறித்து தன்னிடம் வேலை செய்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் எனக் கேட்கும் பொழுது மிக எதார்த்தமாக கதாபாத்திரத்தின் மனநிலையைப் பிரதிபலித்துள்ளார். அவரது க...