Shadow

Tag: உத்தரவு மகாராஜா

உத்தரவு மகாராஜா விமர்சனம்

உத்தரவு மகாராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரவியின் காதுக்குள், 'நிற்காமல் ஓடிக்கொண்டே இரு'க்கும்படி உத்தரவிடுகிறார் இரண்டாம் இராஜராஜச் சோழன். அந்த உத்தரவை ரவி மீறினால், செவிப்பறையை அலறச் செய்யும் பலமான ஒலி எழுந்து, ரவியை நிலைகுலையச் செய்துவிடும். மகாராஜாவின் உத்தரவுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர ரவிக்கு வேறு மார்க்கம் இல்லை. ஏன் அந்த ஒலி எழுகிறது, யார் அந்த ஒலியை எழுப்புகின்றனர், எப்படி அதிலிருந்து ரவி மீண்டான் என்பதுதான் படத்தின் கதை.  படத்தின் முதற்பாதியில், இரண்டாம் ராஜராஜச் சோழனும் அவனது வீரர்களும் குதிரையில் வருகின்றனர். அஸெல் மீடியாவின் 3டி கிராஃபிக்ஸில் அவை இயல்பாய்ப் பொருந்துகின்றன. ட்ரெய்லரிலேயே அந்த மங்கலான குதிரைகளைப் பார்க்கலாம். அவை படத்தில் அழகாகப் பொருந்தி, நாயகனின் காதில் கேட்கும் அமானுஷ்யக் குரல்களுக்கான நேர்த்தியான உருவங்களாக உள்ளன. அமெச்சூரான கிராஃபிக்ஸ் என்ற எண்ணம் எழாததற்குக் காரணம், ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்...