Shadow

Tag: என்.எஸ்.கிருஷ்ணன்

ஹரிதாஸ் (1944)

ஹரிதாஸ் (1944)

சினிமா, திரை விமர்சனம், தொடர்
(முக்கிய நடிகர்கள்: எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், என்.சி.வசந்த கோகிலம், புளிமூட்டை ராமசாமி)‘ஹரிதாஸ்’ திரைப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் ஒரு தனிப் பெருமையும், நீங்காத புகழும் உண்டு. இப்படத்தின் கதை ‘பக்த விஜயம்’ என்கிற நூலை ஆதாரமாகக் கொண்டது. 16-10-1944 இல் வெளிவந்த இத்திரைப்படம் சென்னை பிராட்வே தியேட்டரில் அந்த வருட தீபாவளி உட்பட 3 தீபாவளிகளைக் கொண்டாடி, 110 வாரங்கள் ஓடி ஒரு மாபெரும் சரித்திரம் படைத்தது. ராயல் டாக்கி டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் தயாரிப்பான ‘ஹரிதாஸ்’ இரண்டாவது உலகப்போர் மும்மரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவந்ததால், அப்போதைய அரசுக் கட்டுப்பாட்டின் காரணமாக நீளம் குறைந்த படமாகத் தயாரிக்கப்பட்டது. மொத்த நீளம் 10995 அடிகள் தாம். இது அக்கால நடைமுறைப்படி மிகச் சிறிய படம். இந்த ராயல் டாக்கி டிஸ்ட்ரிபுயூட்ட...
சிவகவி (1943)

சிவகவி (1943)

சினிமா, திரை விமர்சனம், தொடர்
(முக்கிய நடிகர்கள் : எம்.கே.தியாகராஜ பாகவதர்; எஸ்.ஜெயலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.ஆர்.ராஜகுமாரி; டி.பாலசுப்ரமணியம்; செருகளத்தூர் சாமா)பொய்யாமொழிப் புலவரைத் தான் ‘சிவகவி’ என்பார்கள். நாற்பத்து மூன்றில் வெளிவந்த ‘சிவகவி’ படத்தை, 1948 இல் ஒரு சிவராத்திரி இரவில், சிவராத்திரி கொண்டாடிய சில சிறுவர்களுடன் என்னையும் சேர்த்து படம் பார்ப்பதற்கு தியேட்டர் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார் எங்கள் தெருவில் வசித்த பெரியவர் ஒருவர். வெகு சுவாரஸ்யமாகப் படம் பார்த்த நினைவு. பாடல்கள் பற்றிய விசேஷ அறிவோ, புரிதலோ ஏற்படாத காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் குழுவினரின் நகைச்சுவைக் காட்சிகளையே பெரிதும் விரும்பி, ரசித்துப் பார்க்க முடிந்தது. என்றாலும், மிகவும் இனிமையான பாடல்கள் தான் இப்படத்தில் சிறப்பாகச் சொல்லப்பட வேண்டிய அம்சம். சிறுவயதில் மனதில் பதியும் பல சம்பவங்கள் எளிதில் நம்மை விட்டுப் போய்விடுவதில...
மங்கம்மா சபதம் (1943)

மங்கம்மா சபதம் (1943)

சினிமா, திரை விமர்சனம், தொடர்
(முக்கிய நடிகர்கள்: ரஞ்சன், வசுந்தரா தேவி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், புளி மூட்டை ராமசாமி, குளத்து மணி)டைரக்டர் கே.சுப்ரமணியம் அவர்களின் மோஷன் பிக்சர்ஸ் ஸ்டுடியோ ஏலத்திற்கு வந்த போது அதை ஏலத்தில் எடுத்தவர் எஸ்.எஸ்.வாசன். தான் வாங்கிய நிறுவனத்திற்கு ‘ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட்’ எனப் பெயர் சூட்டினார். இங்கிருந்து முதலில் தயாரான படம் ‘மதன காமராஜன்’. எழுத்தாளரும் இலக்கியவாதியுமான பி.எஸ்.ராமையா கதை, வசனம். இது ஜெமினியின் சொந்தத் தயாரிப்பல்ல. அமிர்தம் டாக்கீஸ் என்கிற நிறுவனத்திற்காக ஜெமினி தயாரித்துக் கொடுத்த படம். ஜெமினியின் முத்திரையில் முதன் முதல் தயாரிக்கப்பட்டு வெளிவந்த படம் நந்தனார். 20.09.1942 இல் வெளியான இப்படத்தில் நந்தனாராக எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி, நடித்திருந்தார். அபரிதமான வெற்றியை அடைந்த இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியைப் பெற்று ஒரு சிறந்த இசைச்சித்திர...
கண்ணகி (1942)

கண்ணகி (1942)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, பி.கண்ணாம்பா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.பாலசுப்ரமணியம், யு.ஆர்.ஜீவரத்தினம்)ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான ‘கண்ணகி’ 1942 இன் ஆகப் பெரிய வெற்றிச் சித்திரம். ஜூபிடர் பிக்சர்ஸ் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய சிறந்த படத்தயாரிப்பு நிலையங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தின் முந்தைய படங்கள் ‘சந்திரகாந்தா (1936)’, மற்றும் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி அம்மாளின் கதையான ‘அனாதைப்பெண் (1938)’. இப்படங்களைத் தொடர்ந்து வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் ‘கண்ணகி’. சிலப்பதிகாரம் தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. தமிழ் மொழிக்கு இக்காப்பியத்தின் வாயிலாகப் பெருமையைச் சேர்ந்தவர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரப் பாத்திரங்களான கோவலன், கண்ணகி, மாதவி போன்றோர் பின்னிப் பிணைந்த மகத்தான கதையம்சம் கொண்ட ‘கண்ணகி’ கதையை ஜூபிடரின் கண்ணகி வெளிவருவதற்கு முன்பே தயாரித...
ஆர்ய மாலா (1941)

ஆர்ய மாலா (1941)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன்; டி.எஸ்.பாலையா; எம்.எஸ்.சரோஜினி; டி.ஏ.மதுரம்; எம்.ஆர்.சந்தானலட்சுமி)1940-களில் தொடர்ந்து படங்களை உருவாக்கி வந்த மிகச்சிறந்த சினிமா தயாரிப்பு நிறுவனங்களான சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், ஜெமினி, ஏவி.எம்., ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனங்களுக்கு நிகராகப் பேசப்பட்ட மற்றொரு சினிமா படத்தயாரிப்பு நிறுவனம் கோயம்புத்தூரிலிருந்து இயங்கி வந்த பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம். ஆரம்பத்தில் இதன் உரிமையாளர்கள் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு என்பவரும் சேலம் நாராயண அய்யங்கார் என்பவரும் ஆவர். இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக சிவகவி (1943), ஜகதலப்பிரதாபன் (1944), கன்னிகா (1947), ஏழைபடும்பாடு (1950), மலைக்கள்ளன் (1954) மற்றும் மரகதம் (1959) போன்ற படங்களுக்கெல்லாம் முன்னோடியாக இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘ஆர்ய மாலா’. இது ஒரு மாபெரும் வ...
சகுந்தலை (1940)

சகுந்தலை (1940)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: ஜி.என்.பாலசுப்ரமணியம்; எம்.எஸ்.சுப்புலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.எஸ்.துரைராஜ்) 1940 ஆம் வருஷம் தமிழ்த்திரையுலகிற்கு ஒரு முக்கியமான வருஷம். இந்த வருஷம் வெளிவந்து பெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் சகுந்தலை. ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் கதையை விட தலையாய அம்சமாக இருந்தது அவற்றின் பாடல்கள் தாம். புதிதாகத் தோன்றியிருந்த சினிமாவை, நாடகத்தின் தொடர்ச்சியாகவே கருதினர் அன்றைய மக்கள். பவளக்கொடி, ஸ்ரீவள்ளி போன்ற அக்கால பிரபல நாடகங்களில் பாடப்பட்டுவந்த பாடல்களினால் வெகுவாகக் கவரப்பட்டிருந்த மக்கள், அதைப் போலவே திரையிலும் எதிர்பார்த்ததன் விளைவு தான் ஆரம்பகாலப் படங்களின் ஏராளமான பாடல்களுக்கான காரணமாக இருக்க முடியும். பின்னணி பாடுவது என்கிற ஏற்பாடுகள் எல்லாம் தோன்றியிராத காலம், எனவே சினிமாவில் நடித்தவர்கள் பெரும்பாலும் பாடத் தெர...