Shadow

Tag: கலை இயக்குநர் முத்துராஜ்

‘தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’ – ஷாருக் கான்

‘தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’ – ஷாருக் கான்

சினிமா, திரைச் செய்தி
ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு  முன்னதான விளம்பரப்படுத்தும்  நிகழ்வு சென்னையில்  பிரமாண்டமாக  நடைபெற்றது.சென்னையில்  உள்ள  தனியார்  கல்லூரி  வளாகத்தில்  அமைந்திருக்கும் கலை  அரங்கில்  ஆயிரக்கணக்கான  மாணவ,  மாணவிகள்  மற்றும் ரசிகர்களுடன்  நடைபெற்ற  இந்நிகழ்வில்  படத்தை தமிழகம்  மற்றும்   கேரளாவில்  வெளியிடும்  விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம்  கோபாலன்  உள்ளிட்ட  படக்குழுவினர்  கலந்து  கொண்டனர். இவ்விழாவிற்கு  வருகை  தந்திருந்த  அனைவரையும்  விநியோகஸ்தரான  ஸ்ரீ கோகுலம்  கோபாலன்  வரவேற்றார். இந்நிகழ்வில்  இசையமைப்பாளர்  அனிருத்  பேசுகையில்,  '' என் மீது நம்பிக்கை  வைத்து  எனக்கு  வாய்ப்பளித்த  ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட்  நிறுவனத்திற்கும்,  பூஜா தட்லானி  மற்றும்  கௌரி கான்  ஆகியோருக்கும்  நன்றி.  பாடலா...
2.0 எனும் அதி பிரம்மாண்டம்

2.0 எனும் அதி பிரம்மாண்டம்

சினிமா, திரைச் செய்தி
300 கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படம், 550 கோடிக்கு நீண்டுவிட்டது என்கிறார் ரஜினி. ஆனாலும், படம் அதனை வசூலித்துவிடும் என்கிறார் ரஜினி மிக நம்பிக்கையுடன். படத்தொகுப்பாளர் ஆண்டனி, மூன்று முறை எடிட்டிங் செய்துள்ளார். ஒன்று, அனிமேஷன் வடிவிலான ப்ரீ-விஷுவலைசேஷன்; இரண்டு, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல்; மூன்றாவது, விஷுவல் எஃபெக்ட்ஸ்களுடன் என மொத்தம் மூன்று முறை முழுப் படத்தையும் தொகுத்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அப்படியே! படம் தொடங்கும் முன் ஒருமுறை, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல் மற்றொரு முறை, தற்போது, அட்டகாசமான விஷுவல் எஃபெக்ட்ஸ்களுக்கு ஈடு செய்யும் வகையில் இசையமைத்து வருகிறார். உலகத்திலேயே முதல் முறையாக, செளண்ட் டிசைனிங்கில் 4டி (4D - SRL) தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தியுள்ளார் ரசூல் பூக்குட்டி. உபயோகப்படுத்தியுள்ளார் என்பதை விட, உருவாக்கியுள்ளார் என்பதே சரி. தங்களது புதிய பரிமாணத்திற்கு...
சீமராஜாவின் திருவிழா – கலை இயக்குநர் முத்துராஜ்

சீமராஜாவின் திருவிழா – கலை இயக்குநர் முத்துராஜ்

சினிமா, திரைத் துளி
கிராமப்புறத் திரைப்படங்களுக்கு அதிக வேலை இருக்காது, மிகவும் எளிதாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். பச்சைப்பசேலென வயல் வெளிகள், அமைதியான ஏரிகள், தெளிவான சிற்றோடைகள், வண்ணமயமான திருவிழாக்கள், இனிமையான குயில் சத்தம் ஆகியவை மட்டுமே கிராமத்துப் படங்களின் ஆதாரம் என்ற நினைப்பு இருக்கிறது. ஆனால் உண்மையில், தொழில்நுட்பக் குழுவின் இமாலய உழைப்புத் தேவைப்படுகிறது.  குறிப்பாக, 'கலை இயக்குநர்' பங்கு அதிகமாகத் தேவைப்படுகிறது. ஒரு 'திருவிழா' படம் என்று சாதாரணமாகச் சொல்லி விடலாம். ஆனால் அந்தத் திருவிழா அனுபவத்தைத் திரையில் கொண்டு வருவது மலையை இழுப்பதற்குச் சமம். சிவகார்த்திகேயன் - சமந்தா நடித்துள்ள சீமராஜாவில் கலை இயக்குநர் முத்துராஜின் உழைப்பு அபரிமிதமானது. சீமராஜா படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கலை இயக்குநர் முத்...