சினிமாசர்கார் விமர்சனம்
தனது ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாகப் போட்டு விடுவதால், செக்ஷன் 49 P-இன் படி, மீண்டும் சட்டத்தின் உதவியோடு பேலட் ஓட்டைப் போடுகிறார் சுந்தர் ராமசாமி. கள்ள ஓட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்கு போட, மறு தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் சுந்தரைச் சீண்டி விட, தேர்தலில் நிற்க முடிவெடுக்கிறார் சுந்தர். செங்கோலினை நிறுவ நல்லதொரு சர்க்கார் அமையவேண்டுமென விரும்புகிறார் சுந்தர் ராமசாமி. செங்கோல் என்றால் நீதி, நேர்மை தவறாத நல்லாட்சி. […]













