Shadow

Tag: கீர்த்தி சுரேஷ்

Zee 5 இல் ரகு தாத்தா | செப்டம்பர் 13 முதல்

Zee 5 இல் ரகு தாத்தா | செப்டம்பர் 13 முதல்

OTT
ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ரகு தாத்தா திரைப்படம், இந்தித் திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப் பேசும் படைப்பாகும். சுமன் குமார் இயக்கத்தில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகுதாத்தா, ZEE5 இல், செப்டம்பர் 13 , 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது. ரகு தாத்தா தமிழிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும் காணக் கிடைக்கும். நடிகை கீர்த்தி சுரேஷ், “பெண் சுதந்திரத்தை நம்பும் கயல்விழியின் கதாபாத்திரத்தில் நடித்த ‘ரகுதாத்தா’ திரைப்படம் என் மனதுக்கு நெருக்கமான சிறப்பான பயணமாக அமைந்தது. இயக்குநரின் கதையை உயிர்ப்பிப்பது சவாலாக இருந்தது. உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் இந்த அட்டகாசமான கதையை ஜீ5 இல் காண உள்ளதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இது நாங்கள் எடுத்துக் கொண்ட கருவினைச் சுற்றி அர்த்தமுள்ள உரையாடல்களைத் தொடர்ந்து தூண்டும் என்று நம்புகிறேன்” என்றார். ஹோம்பாலே பி...
கீர்த்தி சுரேஷ் – KCL திருவனந்தபுரம் அணி உரிமையாளர்

கீர்த்தி சுரேஷ் – KCL திருவனந்தபுரம் அணி உரிமையாளர்

சமூகம்
முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் நடைபெறவுள்ள KCL கேரள லீக் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளாராகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் திரைத்துறைக்கு இணையாக கிரிக்கெட்டுக்குத் தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஐபில் போட்டிகள் மீதான மோகத்தைத் தொடர்ந்து, கேரளத்தில் கேரள ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், கேரளாவிற்கெனத் தனித்த கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது. ஐபில் போட்டி அணிகளில், நட்சத்திர நடிகர்கள் உரிமையாளர்களாகச் செயல்பட்டு வருவது போல், கேரளத்துத் திருவனந்தபுரம் அணிக்கு உரிமையாளராக மாறி அசத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். கேரளாவில் கிரிக்கெட் விளையாட்டினை ஊக்கிவிக்கும் வகையிலும், திறமையான இளைஞர்களை இந்தியாவிற்கு அடையாளம் காட்டும் நோக்கிலும் இந்த KCL போட்டிகள் நடக்கவுள்ளன. 6 அணிகள் ...
ரகு தாத்தா விமர்சனம்

ரகு தாத்தா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஹிந்தித் திணிப்பு தீவிரமாக இருந்த காலகட்டத்தில் நிகழ்கிறது கதை. திராவிட இயக்கத்தின்பால் ஆழ்ந்த பற்றுடையவராக கதையின் நாயகி வலம் வருகிறார். க.பா. எனும் கயல்விழி பாண்டியன் ஓர் எழுத்தாளருமாவார். தனது தாத்தாவிற்குப் புற்றுநோய் என்பதாலும், அவரது கடைசி ஆசை தனது திருமணத்தைப் பார்க்கவேண்டும் என்பதாலும், திருமணத்திற்குச் சம்மதிக்கிறார் கயல்விழி. ஆனால், தனக்கு மாப்பிள்ளையாக வரப் போகிறவன் பசு தோல் போர்த்திய புலி என்றுணர்ந்து, எப்படியாவது கல்யாணம் தானாகவே நிற்கவேண்டும் எனப் போராடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெறுகின்றதா இல்லையா என்பதே கதை. நல்ல பகடியான தலைப்பு. 'இன்று போய் நாளை வா (1981)' எனும் இயக்குநர் கே. பாக்யராஜின் படத்தில் வரும் ஒரு வசனத்தைத் தலைப்பாக உபயோகித்துள்ளனர். விருப்பமின்றி ஹிந்தி கற்கும் ஒருவரின் மனோநிலையைச் சுட்டுவதற்காக இத்தலைப்பைப் பயன்படுத்தியுள்ளனர். ஹிந்தித் திணிப்பை ஊக்குவிப்பத...
சைரன் விமர்சனம்

சைரன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நாயகன் 16 வருட காலமாக பரோலில் செல்ல மறுத்து வருகிறான். ஒரு கட்டத்தில் பரோலில் செல்ல சம்மதிக்கிறான். அவன் பரோலில் வெளிவந்த தருணத்தில் அவன் வழக்கோடு தொடர்புடைய நபர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். போலீஸின் சந்தேகம் நாயகன் பக்கம் திரும்ப துவங்க நாயகன் அப்பழியை மறுக்கிறான். இறந்தவர்கள் எப்படி இறந்து போனார்கள் நாயகனின் வாழ்க்கை என்ன ஆனது என்பதை விவரிப்பதே இந்த சைரன் திரைப்படத்தின் கதை.. துவங்கும் போது லாக்கப் மரண வழக்கு விசாரணையில் வென்று தன் காக்கி யூனிபார்மை மீண்டும் போடும் நாயகி நந்தினி, மற்றும் கைதி யூனிபார்மை கலைந்து தன் சொந்த ஆடையை அணிந்து பரோலில் வெளி வரும் நாயகன் திலகவர்மன் என முரணான பின்னணியுடன் துவங்குகிறது திரைப்படம். பின்னர் நாயகனின் முரணான செய்ல்பாடுகளின் மூலம் காட்சிகளின் வழியே திரைக்கதையின் சுவாரஸ்யம் கூடுகிறது. Shadow போலீஸ் ஆக வரும் யோகிப...
அட்லீ தயாரிக்கும் பாலிவுட் திரைப்படம் “பேபி ஜான்” மே 31ல் வெளியாகும்

அட்லீ தயாரிக்கும் பாலிவுட் திரைப்படம் “பேபி ஜான்” மே 31ல் வெளியாகும்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் திரைப்படத்திற்கு 'பேபி ஜான்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் டைட்டிலுக்கான சிறப்பு வீடியோவும் வெளியானது. இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பேபி ஜான்'. இதில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1‌ ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள...
உதவி இயக்குநர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அட்லீயின் “ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ்”  நிறுவனம்

உதவி இயக்குநர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அட்லீயின் “ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ்” நிறுவனம்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் 'VD18 ' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் 'VD18' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1‌ ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரி...
சிம்புவுடன் நடிக்க வேண்டும் என்கின்ற தீராத ஆசை – நடிகை தேவயானி ஷர்மா

சிம்புவுடன் நடிக்க வேண்டும் என்கின்ற தீராத ஆசை – நடிகை தேவயானி ஷர்மா

திரைச் செய்தி, திரைத் துளி
டெல்லியை பூர்விகமாக கொண்ட நடிகை தேவயானி ஷர்மா, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகங்களில் வலம் வருகிறார். 2021 ஆம் ஆண்டு , ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பலவிதமான நாட்டிய கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவர் கூறுகையில், " ஹிந்தி , தெலுங்கு என்ற மொழிகளில் நான் படங்கள் செய்திருந்தாலும்  எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது. சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் செயல்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும். கீர்த்தி சுரேஷ் சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம். வாழ்வில் என்னுடைய லட்சியம் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே ஆகும். இதற்காக முழு வீச்சில் இறங்கி உள்ளேன், அதற்கான வேலையையும் தொடங்கி விட்டேன். ...
மாமன்னன் விமர்சனம்

மாமன்னன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் மற்றும் அண்ணல் காந்தியடிகள் ஆகியோரின் அருபெரும் முயற்சியால், பட்டியலினச் சமூகம் மற்றும் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் அதிகார அமைப்புக்குள் வர வேண்டும் என்கின்ற உயரிய எண்ணத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சரத்தாகவே நிறைவேற்றிய சமாச்சாரம் தான் “தனித் தொகுதி” திட்டம். இது கிட்டத்தட்ட 1932 ஆம் ஆண்டு காலம் தொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். இதற்கு முதன்முதலாக 1891ஆம் ஆண்டு காலத்திலேயே தமிழகத்தில் இருந்து குரல் எழுப்பியவர்கள் அயோத்திதாச பண்டிதரும், இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் தான். ஆரம்பக் காலகட்டங்களில் பட்டியலினச் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், சீக்கியர்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் பட்டியலினப் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களும் இஸ்லாமிய சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மக...
சாணிக்காயிதம் விமர்சனம்

சாணிக்காயிதம் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
க்வென்டின் டரான்டினோ படங்களின் பாதிப்பில், ரத்தமும் சதையும் தெறிக்கும் ஒரு பழிவாங்கும் படம் தமிழில் வந்தால் எப்படியிருக்கும்? சாதிப் பெருமிதம் எனும் கயமையால் நிகழ்த்தப்படும் கொடூரத்தைப் பொறுக்கமாட்டாமல், பாதிக்கப்பட்ட பொன்னி எனும் ஒரு பெண் பழிவாங்கப் புறப்படுவதே சாணிக்காயிதத்தின் கதை. தன் கணவனையும் மகளையும் உயிரோடு எரித்தவர்களைத் தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்க ஒரு சாரார் முனையும் போது, சட்டமாவது மயிராவது என தனது கைகளாலேயே அனைவரையும் உயிரோடு எரித்துக் கொல்லும் வன்மத்துடன் தன் அண்ணன் சங்கையாவுடன் இணைந்து கொலை தாண்டவமாடுகிறார் பொன்னி. நகைமுரண் என்னவென்றால், புதுப்பேட்டையில் தனுஷைக் கொண்டு செல்வராகவன் காட்சிப்படுத்திய தனி மனிதனுள் தன்னிச்சையாக எழும் கொலைவெறியை, செல்வராகவனைக் கொண்டு காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அப்படத்தில் தனுஷுக்கான நியாயங்களை விட, இப்படத்தில் செல்வ...
சாணிக்காயிதம் – பழி வாங்கிம் கீர்த்தி சுரேஷ்

சாணிக்காயிதம் – பழி வாங்கிம் கீர்த்தி சுரேஷ்

சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் செல்வராகவனை நடிகராக அறிமுகப்படுத்தியதோடு, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க மிக அழுத்தமான படமாக 'சாணிக்காயிதம்' திரைப்படம் உருவாகியுள்ளது. தலைமுறை தலைமுறையாக அநீதி திணிக்கப்படும் குடும்பத்தில் சிக்கித் தவிக்கும் பொன்னி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் பழிவாங்கும் க்ரைம் த்ரில்லரில் நடித்தது பற்றி கீர்த்தி சுரேஷ், "இனிமையாகவும் வசீகரமாகவும் இருக்கும் கதாபாத்திரங்களில் நடித்த எனக்கு, பொன்னி கதாபாத்திரத்திற்காக மிகவும் முரட்டுத்தனமான, ரத்தம் சதையும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று இயக்குநர் கூறினர். அது போக இந்தக் கதாபாத்திரத்திற்காக ஒல்லியாக வேண்டும் எனக் கூறினர். முன் தயாரிப்பு விஷயத்தில் உண்மையில் நான் ஒன்றும் செய்யவில்லை என்று தான் நினைக்கிறேன். நான் அந்த உடையை அணிந்து கொண்டு, அந்த மேக்கப்பை போட்டுக் கொண்...
பெண்குயின் விமர்சனம்

பெண்குயின் விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
ரிதம் எனும் பெண்ணின் மகன் காணாமல் போய், ஆறு வருடங்களுக்குப் பின் கிடைக்கின்றான். அவனை யார் கடத்தினார்கள், அந்தச் சிறுவனுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரிந்து கொள்ள ரிதம் நினைக்கிறார். அவரால் அதைத் தெரிந்து கொள்ள முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. “ஓப்பன் பண்ணா, காட்டுக்கு நடுவுல ‘மதர் ஆஃப் நேச்சர்’ சிலை. ஒரு கருப்பு நாய், தத்தித் தத்தி நடக்கும் சின்ன பையன், சிலைக்குப் பின்னாடியிருந்து மஞ்சள் நிறக் குடையில் சார்லி சாப்ளின் முகமூடி அணிந்த கொலைகாரன். அதோடு படம் சரி” என பெண்குயின் பார்வையாளர்களைத் தெறிக்க விட்டுள்ளது. படத்தோடு ஒன்ற முடியாமல், தொடக்கத்தில் இருந்தே ஓர் அந்நியத்தன்மை இழையோடுகிறது. என்ன தான் விஷூவல்ஸில் அசத்தியிருந்தாலும், தட்டையான கதாபாத்திரங்களை மீறிப் படத்தில் கவனம் செலுத்த இயலாமல் போகிறது. சுமார் ஆறு வருடங்களுக்குப் பின் கிடைத்த மகனைத் தனி அறையில் படுக்க வைப்பதெனும் கலாச்சாரமே ப...
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

சினிமா, திரைத் துளி
மேயாத மான், மெர்க்குரி படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படத்தில், தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்க, அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கல் ராமன், எஸ் சோமசேகர் மற்றும் கல்யாண சுப்பிரமணியன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளர்களாகப் பொறுப்பேற்று இருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிருஷ் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்கமும், ஆடை வடிவமைப்பு பல்லவி சிங் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஸ்டோன் பென்ச் பிலிம்ஸின் 'படைப்பு எண்: 3', செப்டம்பர் 12 அன்று இனிதே கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற...
மைதான் – கால் பந்தாட்டத்தின் பொற்காலம்

மைதான் – கால் பந்தாட்டத்தின் பொற்காலம்

சினிமா, திரைத் துளி
இந்தியக் கால்பந்து அணியின் பொற்காலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ள படம் “மைதான்”. அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தில், இந்த ஆண்டு தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்தை ZEE ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து வழங்குகின்றனர். 2020 இல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற படமான ‘பாதாய் ஹோ’வின் அமித் ரவீந்தர்நாத் சர்மா இப்படத்தை இயக்கயுள்ளார். திரைக்கதை சைவின் குவாட்ரோஸ் மற்றும் வசனங்களை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளனர். "மைதான்" போனி கபூர், ஆகாஷ் சாவ்லா மற்றும் அருணாவா ஜாய் சென்குப்தா ஆகியோர் தயாரிக்கின்றனர்....
சர்கார் விமர்சனம்

சர்கார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டாகப் போட்டு விடுவதால், செக்‌ஷன் 49 P-இன் படி, மீண்டும் சட்டத்தின் உதவியோடு பேலட் ஓட்டைப் போடுகிறார் சுந்தர் ராமசாமி. கள்ள ஓட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்கு போட, மறு தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் சுந்தரைச் சீண்டி விட, தேர்தலில் நிற்க முடிவெடுக்கிறார் சுந்தர். செங்கோலினை நிறுவ நல்லதொரு சர்க்கார் அமையவேண்டுமென விரும்புகிறார் சுந்தர் ராமசாமி. செங்கோல் என்றால் நீதி, நேர்மை தவறாத நல்லாட்சி. சர்க்கார் என்றால் அரசாங்கம். மக்களுக்கு நல்லது செய்யத் தடையாக இருக்கும் அரசு இயந்திரத்தின் சக்கரங்களான ஆளுங்கட்சியை எப்படி ஓரங்கட்டுகிறார் என்பதுதான் படத்தின் கதை. சினிமா என்பது கனவுத்தேசம்தானே! நல்ல சர்க்காரைத் தன்னால் தான் உருவாக்க முடியுமென்ற ஒரே கனவைப் பலர் காணலாம். கனவு மட்டும் காணாமல் செயலில் இறங்குகிறார் சுந்தர் ராம...
சண்டக்கோழி 2 விமர்சனம்

சண்டக்கோழி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2005 இல் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் சண்டக்கோழி. சண்டைக்கு முந்தி நிற்கும் ஆளெனத் தலைப்பைப் பொருள் கொள்ளலாம். ஒரு கொலையால், வேட்டைக் கருப்புக் கோவிலின் திருவிழா ஏழு வருடங்களாக நடைபெறாமல் தடைப்படுகிறது. மீண்டும் அத்திருவிழா நடைபெற்றால், அன்பு எனும் இளைஞனைத் திருவிழாவில் வைத்துக் கொல்ல, வரலக்‌ஷ்மி குடும்பத்தினர் காத்திருகின்றனர். அன்புவையும் காப்பாற்றி, திருவிழாவையும் எப்படி ராஜ்கிரணும் விஷாலும் நடத்துகின்றனர் என்பதுதான் படத்தின் கதை. சண்டக்கோழி படத்தின் வெற்றிக்கு மீரா ஜாஸ்மின் மிக முக்கிய காரணம். அதை மனதில் வைத்துக் கொண்டு, கீர்த்தி சுரேஷை மீரா ஜாஸ்மின் ஆக்கிடப் படாதபாடு பட்டுள்ளனர். எத்தனை பேர் வந்தாலும் தூக்கி வீசிடுவேன் என்ற மதமதப்போடே வளைய வருகிறார் விஷால். எப்படியும் அனைவரையும் துவம்சம் செய்துவிடுவார் என்று ரசிகர்களுக்குத் தெரியாதா? அதைச் சுவாரசியமாகச் சொல்லவேண்டாமா?...