Shadow

Tag: சன்னி வேய்ன்

ஜிப்ஸி விமர்சனம்

ஜிப்ஸி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜிப்ஸி என்றால் நாடோடி எனப் பொருள்படும். காஷ்மீரில், ஒரு முஸ்லீம் அம்மாக்கும், ஹிந்து அப்பாக்கும் பிறக்கும் குழந்தை, இந்தியாவெங்கும் பயணிக்கும் ஒரு நாடோடியிடம் வளர நேருகிறது. அந்நாடோடி குழந்தைக்கு ‘ஜிப்ஸி’ எனப் பெயரிடுகிறார். அரசியல் புரிதலுள்ளவனாக வளரும் ஜிப்ஸிக்குக் கட்சிச் சார்போ, கொள்கைச் சார்போ எதுவும் கிடையாது. ஆனாலும், புரட்சிகர தெருப் பாடகனாக அடையாளம் காணப்படுகிறான். தனக்கான முகம் என நாகூரில் ஒரு பெண்ணை அடையாளம் காணுகிறான். அந்தப் பெண், திருமணத்திற்கு முன் தினம் அழுது கொண்டிருப்பதைப் பார்க்கிறான். உடனே ஜிப்ஸி, “கவலைப்படாதீங்க உங்க ஆளுங்க (பாகிஸ்தான்) தான் ஜெயிப்பாங்க (கிரிக்கெட்டில்)” என வஹிதாவிடம் சம்பந்தமே இல்லாமல் சொல்கிறான். அதுவரை அழகான விஷுவல்ஸ்களினால் கள்ளுண்ட போதையில் மதி மயங்கி படம் பார்த்துக் கொண்டிருந்த மயக்கம் சட்டெனத் தெளிகிறது. நம்முடன் வாழும் முஸ்லிம்கள் இந்தியர்கள...